வண்டி ஸ்டார்ட்டாகலைன்னு தெரிஞ்சவன்கிட்ட விட்டா, அவன் பிளக் போயிருச்சு, பழைய பிளக் போட்ருக்கேன், பணம் வேணாம், எடுத்துட்டு போன்னு சொல்லிட்டான். வேல பாத்திருக்கான், பணம் தரலைன்னா நல்லா இருக்காதுன்னு நினைச்சுட்டு டீ சாப்பிடுறியான்னு கேட்டு ஒரு பப்ஸோட சேர்த்து நூறு ரூபா ஆயிருச்சு. வீட்டுக்கு வந்துட்டு காலை-ல வண்டிய ஸ்டார்ட் பண்ணா ஸ்டார்ட்டாகலை. போன் பண்ணி கேட்டா டெம்பரவரியா பழைய பிளக்கை போட்ருக்கேன், கழட்டிட்டு புது ப்ளக்கை போடுங்கிறான். எவ்வளவுடா வரும்னா, நூறு ரூபாக்குள்ள வரும்.
"அதை நேத்தே போடலாம்ல.? டீ குடிச்ச காசுக்கு பிளக்கு புதுசா வாங்கியிப்பேனே.?"
"டீ வேணும்னு நான் கேட்டேனா.? நீயா வந்து கழுத்தை நீட்டும் போது, நான் என்ன பண்ண.?"
#நாமளாத்தான் போய் மாட்டிக்குவோம் போல.!
#🤣 லொள்ளு
#🤔தெரிந்து கொள்வோம்