ShareChat
click to see wallet page
search
குவைத்தில் மத பிரிவுகளின் அடிப்படையில் வழிபாட்டு தலங்களை அனுமதிப்பது உள்ளிட்ட விதிமுறைகளை உள்ளடக்கிய வரைவுச் சட்டத்தைத் தயாரித்துள்ளதாக இஸ்லாமிய மத விவகாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது: குவைத்தில் வழிபாட்டுத் தலங்களை நிறுவுதல், செயல்படுத்துதல் மற்றும் மேற்பார்வையிடுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் தெளிவான மற்றும் விரிவான வரைவுச் சட்டத்தைத் தயாரித்துள்ளதாக இஸ்லாமிய மத விவகாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. வரைவுச் சட்டத்தை இறுதி ஒப்புதலுக்காகச் சமர்ப்பிப்பதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் கருத்துகளையும், பரிந்துரைகளையும் அமைச்சகம் சேகரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. புதிய வரைவுச் சட்டம், குடிமக்களிடையே மத சுதந்திரம் மற்றும் சமத்துவத்தை உறுதி செய்வதோடு,வழிபாட்டுத் தலங்களின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை அதிகரிப்பதற்கும் புதிய வரைவுச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளன. மேலும் அரசியல், வணிகம் மற்றும் மதச்சார்பற்ற நடவடிக்கைகளுக்கு வழிபாட்டுத் தலங்களை தவறாகப் பயன்படுத்துவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் வரைவுச் சட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் வழிபாட்டுத் தலங்களின் நிர்வாக, தொழில்நுட்ப மற்றும் நிதி விவகாரங்களை கடுமையாக மேற்பார்வையிடுவதை உறுதி செய்வதற்கும் வரைவு சட்டம் அழைப்பு விடுக்கிறது. நாட்டில் அவரவர் மத சுதந்திரத்தை வலுப்படுத்துவதையும் இந்த சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நாட்டில் உள்ள பல்வேறு மத பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப வழிபாட்டுத் தலங்களை அனுமதிக்க ஒரு சிறப்புக் குழுவை உருவாக்குவதற்கும் வரைவுச் சட்டம் வழிவகை செய்கிறது. இதற்கான விதிமுறை மற்றும் வழிகாட்டுதல்களை உருவாக்குவது இந்தக் குழுவின் பொறுப்புகளில் அடங்கும். புதிய சட்டம் நடைமுறைக்கு வந்ததும், நாட்டில் பிற மதங்களுக்கான பல வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும். அதே நேரத்தில்,புதிய சட்டம் பிற மதங்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதிலும் நாட்டின் நலன்களை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்தி செயல்படுத்தப்படும். #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️
🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️ - ARAR BREAKING NEWS | DAIY Tamd ஏTIELI TITTTI 10-12-2025 மத விவகாரத்துறை புதிய சட்டத்தை உருவாக்கியுள்ளது குவைத் குவைத்திலுள்ளமத பிரிவுகளின் அடிப்படையில் அவர்களுக்கான வழிபாட்டு தலங்களை அனுமதிப்பது உள்ளிட்ட விதிமுறைகளை உள்ளடக்கிய LSu வரைவுச்சட்டத்தைத்தயாரித்துள்ளதாக இஸ்லாமிய விவகாரத்துறை அமைச்சகம் மத அறிவித்துள்ளது Whatsapp to +91 94 86 44 33 52 For Advertisements. arabtamildaily com] arabtamildaily  Contact editoratdnews@gmail com WWW . ARAR BREAKING NEWS | DAIY Tamd ஏTIELI TITTTI 10-12-2025 மத விவகாரத்துறை புதிய சட்டத்தை உருவாக்கியுள்ளது குவைத் குவைத்திலுள்ளமத பிரிவுகளின் அடிப்படையில் அவர்களுக்கான வழிபாட்டு தலங்களை அனுமதிப்பது உள்ளிட்ட விதிமுறைகளை உள்ளடக்கிய LSu வரைவுச்சட்டத்தைத்தயாரித்துள்ளதாக இஸ்லாமிய விவகாரத்துறை அமைச்சகம் மத அறிவித்துள்ளது Whatsapp to +91 94 86 44 33 52 For Advertisements. arabtamildaily com] arabtamildaily  Contact editoratdnews@gmail com WWW . - ShareChat