இதுவரைக்கும் ரோகிணி குடும்பத்திடன் சிக்கியது கனவா? அல்லது நிஜமா? என்ற குழப்பத்தில் இருந்த நிலையில் கடைசியில் அது நிஜம் என்று நிரூபணம் ஆகி இருக்கிறது. ரோகிணியை வீட்டை விட்டு விஜயா அடித்து துரத்தி இருக்கிறார். அதனால் ரோகிணி போகிற போக்கில் மீனாவை மாட்டி விட்டு விட்டு போயிருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி பற்றிய உண்மைகள் தெரிந்ததும் முத்து குடும்பத்திடம் வந்து சொல்ல, அதை கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். அப்போது ஸ்ருதி ரோகினியோட மகன்தான் இந்த கிரிஷ் என்றால் அப்போ அவங்களோட ஹஸ்பண்ட் என்று கேட்க, அவங்க ஹஸ்பண்ட் கல்யாணம் ஆன ஏழு மாசத்துல ஆக்சிடென்ட்ல இறந்துட்டாரு அதற்கு பிறகு தான் அதையெல்லாம் மறைச்சு மனோஜ் கல்யாணம் பண்ணி இருக்கா, என்று முத்து சொல்ல விஜயா இது எல்லாம் உண்மையா என்று ரோகினியை போட்டு அடிக்கிறார்.
உன்னை போய் என் பையனுக்கு கல்யாணம் பண்ணி வச்சி அவன் வாழ்க்கையே கெடுத்துட்டேனே. நீ இத்தனை நாளா எங்க கிட்ட நடிச்சி ஏமாத்திட்டு இருந்திருக்கிறாயே.. உன்ன மாதிரி எந்த பொம்பளையும் இருக்கவே முடியாது. எத்தனை பொய் என்று கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க ரோகிணி மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் விஜயா சமாதானம் ஆகவில்லை.
உடனே அண்ணாமலையிடம் சென்று மன்னிப்பு கேட்க, அண்ணாமலை ஏற்கனவே நீ பணக்கார பொண்ணு இல்லை என்ற உண்மை தெரிஞ்சதுமே, வேற பொய் சொல்லி இருக்கியானு கேட்டேனே.. அப்போ கற்பூரம் அடிச்சு இனிமே பொய்யே சொல்ல மாட்டேன்னு சொன்னியே அப்புறம் கூட இவ்வளவு பெரிய உண்மையை மறைத்து வைத்திருக்க என்று கோபப்படுகிறார்.
பிறகு ரோகிணி மனோஜிடம் போய் பேச, மனோஜ் ரோகிணியை போட்டு அடித்து, இத்தனை நாளா நான் தான் புத்திசாலின்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா நீ என்னை இப்படி ஏமாத்தி வச்சிருக்க, ரெண்டு வருஷமா பொய்யான வாழ்க்கை வாழ்ந்திருக்க என்று அடிக்க, அதற்கு ரோகிணி உன் கூட உண்மையா வாழ்ந்தேன். உன்னை தான் லவ் பண்ணுனேன் அதனால தான் எல்லா உண்மையும் சொல்லல என்று கெஞ்சி கொண்டிருக்கிறார்.
ஆனாலும் விஜயா கேட்காமல் ரோகிணியை பிடித்து வெளியே தள்ள சொல்கிறார். ரோகிணி எவ்வளவோ அழுது ஆர்ப்பாட்டம் செய்து இந்த வீட்டை விட்டு போக மாட்டேன் என்று சொன்னாலும் விஜயா கேட்கவில்லை. அவ கழுத்தில் இருக்கும் தாலியை பிடிங்கிட்டு வெளியே தள்ளு என்று சொல்ல, மனோஜ் இனி வா சம்பந்தமா எந்த பொருளும் எனக்கு வேண்டாம். அந்த தாலி கூட எனக்கு தேவையில்லை என்று ரோகினியை பிடித்து வெளியே இழுத்து விடுகிறார்.
போகிற போக்கில் ரோகிணி மீனாவை மாட்டி விடுகிறார். ரொம்ப நன்றி மீனா என்னை பத்தி முழு உண்மையும் இந்த வீட்ல உங்களுக்கு மட்டும் தான் தெரியும். நீ எந்த உண்மையையும் சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டு கடைசில எல்லாத்தையும் முத்துகிட்ட சொல்லிட்டீங்களே என்று சொல்ல மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு ரோகிணி போனதும், விஜயா என்னடி இவ சொல்லிட்டு போற என்று கேட்க, முத்து, அண்ணாமலை எல்லோரும் உனக்கு ஏற்கனவே ரோகிணி பற்றி உண்மை தெரியுமா? எப்போ தெரியும் என்று கேள்வி கேட்கின்றனர் #சிறகடிக்க ஆசை சீரியல் 👩❤️👨📺 #📺எனக்கு பிடித்த சீரியல் #⭐விஜய் தொலைக்காட்சி


