ShareChat
click to see wallet page
search
எம்ஜிஆர் என்ற மக்கள் தலைவர், கறைபடியாத கைகளுக்குச் சொந்தக்காரர், கொடை வள்ளல் எனப் போற்றப்பட்டவர் திமுக ஆட்சியில் ஊழல் என்று சொல்லித்தான் அதிமுகவைத் தொடங்கினார். அவரும், சிபிஐ கல்யாணசுந்தரமும் சேர்ந்து திமுக ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை எழுதி இந்திரா காந்தியிடம் கொடுத்தார்கள். அவர் திமுக ஆட்சியைக் கலைத்து, சர்க்காரியா என்ற நீதிபதி தலைமையில் ஒரு ஆய்வுக்குழுவை அமைத்தார். அந்தக் குழுவின் அன்றாட நிகழ்வுகள் அந்தக் காலகட்டத்தில் பெரிய பெரிய செய்திகளாக பக்கம் பக்கமாக வெளிவந்தன. 1977 தேர்தலில் எம்ஜிஆர் வென்று ஆட்சி அமைத்தார். ஊழல் கட்டுப்பட்டு இருந்தது. 1980 இல் அவர் ஆட்சி கலைக்கப்பட்டு தேர்தல் நடந்தது. அவரிடம் செலவுக்குப் பணம் இல்லை. தமிழ்நாடு முழுமையும் இரண்டு மடங்கு வேகத்தில் மக்களைச் சந்தித்தார். சூறாவளிப் பரப்புஉரை செய்தார். வென்றார். அடுத்து என்ன செய்தார்? சாராயக் கடைகளைத் திறந்தார். உடையார் உடன் உடன்படிக்கை செய்தார். என்ன? ஒரு பாட்டிலுக்கு ஒரு ரூபாய் எம்ஜிஆருக்குத் தந்து விட வேண்டும். அப்படித்தான் எம்ஜிஆர் பணம் சேர்த்தார். அது அவருக்காக அல்ல. கட்சி நடத்துவதற்காக. அந்த உடையார்தான், எம்ஜிஆர் பெயரில் போரூரில் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையை நிறுவினார். ஜெயலலிதா இமாலய ஊழல் செய்தார். மூன்று முறை சிறை சென்றார். அதன்பிறகும், 2001, 2011, 2016 தேர்தல்களில் மக்கள் அவரை வெற்றி பெறச் செய்தார்கள். எனவே, தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளின் ஊழல் என்பது ஒரு பிரச்சினையே இல்லை. காரணம் அவர்கள், தேர்தலின் போது மக்களுக்குப் பங்கு கொடுத்து விடுகிறார்கள். மக்கள் பணம் வாங்கிக் கொண்டுதான் ஓட்டுப் போடுகிறார்கள். அதிகாரிகளின் ஊழல்தான் பிரச்சினையாக இருக்கின்றது. ஆனால், 2016 இல் நரேந்திரர் 500, 1000 ஒழித்தார். இணைய வழி பணப்பரிமாற்றம் தொடங்கியது. அதனால் ஊழல் ஒழியும் காரணம், இனி அதிகாரிகள் கருப்புப் பணத்தைக் கொண்டு புதிய சொத்துகளை வாங்க முடியாது என நான் எழுதினேன். இன்று மக்கள் ஒரு ரூபாய் கூட அலைபேசியில் தருகிறார்கள். எனவே, ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு கிடைக்கின்றது. அப்படி தமிழ்நாட்டு அரசின் அனைத்து நடவடிக்கைகளும் கணினிமயம் ஆகிக் கொண்டு இருக்கின்றது. அதனால் ஊழல் படிப்படியாக ஒழிந்து கொண்டு இருக்கின்றது- பத்திரப் பதிவுத்துறையில் 18 வேலைகளை, உங்கள் வீட்டில் இருந்தே செய்யலாம் என திமுக ஆட்சி இமாலயப் புரட்சி செய்து விட்டது. ஏற்கனவே நிறைய சான்று ஆவணங்களை நாம் இணைய வழியிலேயே பெறுகின்றோம். இன்னும் பத்து ஆண்டுகளில் ஊழல் 90 விழுக்காடு ஒழிந்து விடும். எனவே, இந்தக் காலகட்டத்தில் வந்து நான் ஊழல் செய்ய மாட்டேன் என்பவன் அடி முட்டாள். கள நிலவரம் தெரியாதவன். இப்படிச் சொல்லி மக்களை ஏமாற்றலாம் என நினைக்கின்றான். மக்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். 26.1.2026 #@அமானுஷ்யம்@( HORROR ) #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #📰தமிழ்நாடு அரசியல்📢 #🚨கற்றது அரசியல் ✌️ #😅 தமிழ் மீம்ஸ்