கணவன் தன் மனைவியை அவளுக்கு அநியாயம் இழைத்து கைவிட்டு புறக்ணிக்கும் நிலைக்கு இட்டுச்செல்லும் அளவுக்கு தன் மனைவியை வெறுப்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தடுத்தார்கள். நிச்சயமாக மனிதன் குறையுடனே படைக்கப்பட்டுள்ளான். அவளிடமிருந்து வெளிப்படும் கெட்ட, மோசமான குணமொன்றை வெறுத்தால், அவளிலே காணப்படும் வேறொரு நல்ல குணத்தை - பொருந்தி ஏற்றுக் கொள்வான். அத்துடன் அவனால் பொறுந்திக்கொள்ள முடியாத மோசமான பண்புகளில் பொறுமையை கடைப்பிடிப்பான். அவ்விதம் அவன் பொருமையை கடைபிடிப்பிடிக்கும் அந்த மோசமான பண்பை வெறுப்பதானது அவளை பிரிந்து வாழ்வதற்குரிய அளவிற்கு தூண்டுவதாக அமைந்துவிடுதல் ஆகாது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️


