உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கிரீன் சிட்டி பகுதியில், தனியார் நிறுவனத்தில் பொறியாளர் சூர்ய பிரதாப் சிங் (35) என்பவர் வசித்து வந்தார். இவருக்கும் ரத்னா (46) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து ஒரே வீட்டில் லிவ்இன் வாழ்க்கை நடத்தி வந்தனர்.
ரத்னாவுக்கு 17 மற்றும் 14 வயதுடைய இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்கள் நான்கு பேரும் ஒரே வீட்டில் கடந்த வசித்து வந்தனர். ரத்னாவுக்கும், சூர்ய பிரதாப் சிங்குக்கும் கடந்த சில நாட்களாகவே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சூர்ய பிரதாப் சிங்கிற்கு ரத்னாவின் மூத்த மகள் மீது ஆசை ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனை மகள் தாயிடம் கூறியதை அடுத்து இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ரத்னா தனது மகள்களுடன் இணைந்து சூர்ய பிரதாப் சிங்கை கீழே தள்ளி கத்தியால் அவரது கழுத்தை அறுத்துக் கொடூரமான முறையில் துடிதுடிக்க கொலை செய்துள்ளனர். பின்னர் சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சூர்ய பிரதாப் சிங் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து ரத்னாவிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவலை தெரிவித்தார். அதாவது என் மகளிடம் தவறாக நடக்க முயன்றதால் கொன்றேன் என தெரிவித்துள்ளார். பின்னர் போலீசார் ரத்னா மற்றும் அவரது இரு மகள்களைக் கைது செய்ததுடன், கொலைக்கு பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்தனர். இதனிடையே பணத்திற்காக எனது மகனை கொலை செய்துவிட்டதாக தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #📺டிசம்பர் 11 முக்கிய தகவல் 📢


