*சனிக்கிழமையும் அஷ்டமி திதியும் இணைந்த நன்னாளில் என்ன செய்தால் சிறப்பு.?*
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
தமிழ் கடவுள்களில் ஒன்றான பைரவர்
சிவபெருமானின் அறுபத்து நான்கு
திருமேனிகளில் ஒருவராவார். பைரவரை
சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர்,
ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர்
என்றெல்லாம் அழைக்கின்றார்கள்.
☘️
தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவரை
வழிபாடு செய்தால், நம்முடைய கடன் சுமை
எல்லாம் தேய்ந்து போகும். வளர்பிறை அஷ்டமி
திதியில் பைரவரை வழிபாடு செய்தால், நம்
வாழ்க்கை வளம் பெறும். இதுதான் இந்த
வழிபாட்டிற்கு பின்னால் மறைந்திருக்கும்
ரகசியம்.
☘️
வளர்பிறை அஷ்டமி திதி இருக்கும் எந்த
நேரத்திலும் பைரவரை வழிபடலாம். ராகு
காலத்தில் தான் வழிபட வேண்டும் என்ற
கட்டாயம் இல்லை.
☘️
தொடர்ந்து ஆறு வளர்பிறை அஷ்டமி
நாட்களில் பைரவரை வழிபடுவதன் மூலம்,
கடந்த ஐந்து பிறவிகளில் செய்த
கர்மவினைகள் கரையத் தொடங்கும். இந்த
வழிபாட்டின் முடிவில் பணக்கஷ்டம் விலகி
வருமானம் பெருகும்.
☘️
சனி பகவானுக்கு, குருவாக திகழ்வர்
காலபைரவர். சனிக்கிழமையோடு சேர்ந்து
வளர்பிறை அஷ்டமி திதி வரும் நாளில்
பைரவரை வழிபாடு செய்தால், நமக்கு
சனியால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.
வளமான வாழ்க்கை அமையும். எனவே, இந்த
நாளை நிச்சயம் நாம் தவறவிடக் கூடாது.
☘️
*சனீஸ்வரனும் பைரவரும்:*
☘️
கால பைரவர் எட்டு திசைகளையும் காத்து
நம்மை வழிநடத்தும் காவல் தெய்வம் ஆவார்.
☘️
ஸ்ரீ பைரவரே சனீஸ்வரனுக்கு வரம் அளித்து,
அவரது கடமைகளைச் செய்ய வைத்த குரு
ஆவார்.
☘️
சனியின் வாத நோயை நீக்கியவரும்
பைரவரே.
☘️
தன் சகோதரன் எமதர்மராஜா, பைரவரிடம்
வணங்கி அதிக சக்தி பெற்றதைக் கண்ட
சனீஸ்வரன், பைரவரை நோக்கி கடுமையாக
தவம் புரிந்தார்.
☘️
சனீஸ்வரனின் தவ வலிமையால் பைரவர்
அவர் முன் தோன்றி, நல்லது தீயது செய்யும்
சக்தியை அளித்தார். அப்போது, யாரேனும்
கஷ்டத்தில் இருந்தாலும், பைரவரை வழிபட்டு
சரணடைந்தால் அவர்களுக்கு சனீஸ்வரன்
நன்மையே செய்ய வேண்டும் என்று பைரவர்
சனீஸ்வரனிடம் சத்தியப்பிரமாணம்
வாங்கினார்.
☘️
*வழிபாட்டு முறைகள்:*
☘️
வளர்பிறை அஷ்டமி நாளில் ஸ்ரீ காலபைரவர்
அல்லது சொர்ணாகர்ஷண பைரவரை
வழிபடலாம்.
☘️
வளர்பிறை அஷ்டமியில் 108 காசுகள்
வைத்து அர்ச்சனை செய்து, அந்தக் காசுகளை
தொழில்புரியும் அலுவலகத்திலோ அல்லது
வணிக நிறுவனங்களிலோ வைத்தால்
வியாபாரம் பெருகும். வீட்டில் உள்ள பீரோவில்
வைத்தால் பணம் சேரும்.
☘️
தொடர்ந்து ஆறு வாரங்கள் அல்லது 48
நாட்கள் விரதமிருந்து, தினமும் 108 முறை "ஸ்ரீ
சொர்ணாகர்ஷண பைரவாய நமஹ" என்ற
மந்திரத்தை மனதில் ஜெபிக்க வேண்டும்.
☘️
ஸ்ரீ பைரவரை வணங்குவதால் வறுமை,
பகைவர்களின் தொல்லை, வியாபார
முன்னேற்றம், தனலாபம், பயம் நீங்கி அஷ்ட
ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
☘️
இழந்த செல்வத்தை திரும்பப்பெற 11
அஷ்டமிகள் பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும்.
பைரவ தீபம் என்பது மிளகைச் சிறு
மூட்டையாகக்கட்டி நெய் அல்லது
நல்லெண்ணெய் இட்டு தீபம் ஏற்றுவதாகும்.
☘️
சனி தோஷம் நீங்க பைரவருக்கு 9
சனிக்கிழமைகள் சிவப்பு நிறப் பூக்களால்
அர்ச்சனை செய்து 4 பைரவ தீபங்கள் ஏற்ற
வேண்டும்.
☘️
அஷ்டமி திதியில் பைரவரை தொடர்ந்து
வழிபட்டால் நீண்ட நாட்களாக வராமல் இருந்த
பணம் விரைவில் வந்து சேரும். லட்சுமி
கடாட்சம் கிட்டும், செல்வ வளம் பெருகும்,
மனதில் புதிய உற்சாகம் பிறக்கும்,
தன்னம்பிக்கை அதிகரிக்கும், தைரியம்
உண்டாகும்.
☘️
நவகிரக தோஷங்கள் நீங்க சதுர்கால
பைரவருக்கு செவ்வரளி பூவால் 9 வாரங்கள்
சகஸ்ரநாம அர்ச்சனை செய்ய வேண்டும்.
☘️
வறுமை நீங்க அஷ்டமி திதிகளில் மாலை
நேரத்தில் வில்வம் மற்றும் வாசனை
மலர்களால் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம்
அர்ச்சனை செய்து 11 பைரவ தீபங்கள் ஏற்ற
வேண்டும். #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🌞காலை வணக்கம் #📸பக்தி படம் #🙏 சனிக்கிழமை பக்தி ஸ்பெஷல் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞


