முதலில் முன்னுக்குப் பின் முரணாக உயிரிழந்த செந்தில்குமாரின் மனைவி பாண்டீஸ்வரி கூறிவந்த நிலையில், ஒருகட்டத்தில் தனது கணவரைத் திட்டமிட்டு கொலை செய்ததைப் பின்னர் ஒப்புக்கொண்டார்.
murder
பாண்டீஸ்வரி அளித்துள்ள வாக்குமூலத்தில், சமையல் மாஸ்டர் ராஜமாணிக்கம், தன் முதல் கணவருக்குப் பிறந்த மகளுக்கு வரன் பார்க்கத் துவங்கியபோது, சமையல் மாஸ்டராக இருந்த ராஜமாணிக்கம் திருமண புரோக்கராகத் தனக்குப் பழக்கமாகி, பின்னர் இருவரும் பல மணி நேரம் செல்போனில் தினந்தோறும் பேசி பழகியதாகவும், இந்த விஷயம் கணவர் செந்தில்குமாருக்குத் தெரிய வந்ததாகவும், அதனைக் கேள்விப்பட்டு இருவருக்கும் செந்தில்குமார் மிரட்டல் விடுத்ததால் ராஜமாணிக்கத்துடன் சேர்ந்து கணவரைத் தீர்த்துக் கட்டியதாகத் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இந்தக் கொலை சம்பவத்தில் சமையல் மாஸ்டர் ராஜமாணிக்கம் மற்றும் பாண்டீஸ்வரியை பசுபதிபாளையம் காவல் நிலைய போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் மீறிய தகாத உறவைக் கண்டித்தவரை டீசல் ஊற்றி எரித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #📢ஜனவரி 29 முக்கிய தகவல் 🫠 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔


