ShareChat
click to see wallet page
search
#பத்திஸ்டேட்ஸ் #ஓம்முருகாஆயுளும் நிலையான செல்வமும் கிடைக்க தமிழ் கடவுள் முருகனுக்கு கிருத்திகை விரதம் ! செவ்வாய், கிருத்திகை விரதம், தினத்தில், இன்று முருகனை செவ்வரளி பூவால் அர்ச்சித்தும், திருப்புகழ் பாக்களால் அவன் புகழ் பாடியும் பிரார்த்தனை செய்து முருகக் கடவுளைத் தரிசியுங்கள். பன்மடங்கு பலன்களைப் பெற்று, சகல ஐஸ்வரியங்களுடன் இனிதே வாழ அருளுவார் கந்தக்கடவுள் . மங்கள கிருத்திகை செவ்வாய் கிழமை அன்று வரும் கிருத்திகை மிகவும் விசேஷமானதாகும். செவ்வாய் கிழமையுடன் கிருத்திகை நட்ச்திரம் இணைந்து வரும் நாளில் திருமுருகன் வழிபாடு மிகவும் சிறப்பானதாகும். நோய் தீர்பதில் செவ்வாயும் அதன் அதிபதியான முருக பெருமானும் முக்கியமானவர்கள் ஆகும். முருகனுக்கு செவ்வாய் கிழமைகளில் விரதம் இருப்பது, ஷஷ்டியில் விரதமிருப்பது மற்றும் கிருத்திகை நக்‌ஷதிர நாளில் விரதமிருப்பது முருகப்பெருமானது பேரருள் கிட்டும். முருகனுக்கு உகந்த நட்சத்திர விரதம் கிருத்திகை.. இன்றய தினம் முருகனை விரதம் இருந்து வணங்க வேண்டும். ஞானகுருவான முருகரை வழிபடுவது நீண்ட காலமாக இருந்து வருகிறது. முருகர், எதிரிகள் / அரக்கர்கள் மனதில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்த தனது தாய் பார்வதியிடமிருந்து "வேல்" பெற்று கொண்டார். அந்த சக்தி பொருந்திய வேலை அனைவரும் வழிபாடு செய்கின்றனர். கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்று கூறி சிவபெருமான் ஆசிர்வதித்தார். கார்த்திகை விரதத்தை விநாயகர் கூறியவாறு 12 ஆண்டுகள் அனுஷ்டித்த நாரதர் முருகனருளால் தேவரிஷியாக பதவி பெற்றார். வேறு சிலரும் இவ்விரதம் மேற்கொண்டு நற்கதி அடைந்தார்கள். ஞானகுருவான முருகப் பெருமானை விரதம் இருந்து வணங்கினால் மன அமைதி கிடைக்கும், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் தீரும், நோய்கள் நீங்கும் எதிரிகளை வெல்லும் ஆற்றல் கிடைக்கும். கார்த்திகை விரதம் இருக்க நினைப்பவர்கள் ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம். மனத் தூய்மைக்கும், மன ஒருமைக்கும் வழிசெய்யும் விரதங்களைக் கடைப் பிடிப்பது அனைவருக்கும் நன்மை பயக்கும். முருகனுக்குப் பிடித்த சிவப்பு நிற ஆடையை அணிந்து வழிபடுவது நல்லது. அதே போல் சிவப்பு நிற கனிகளை வைத்து தீபாராதனை செய்து வழிபடுவதால் நம் வாழ்வில் ஏற்படும் தடைகள் நீங்கி வாழ்க்கை சீராகும். அதோடு எதிர்பாராத அளவு புகழும், சக்தியும், நல்ல மங்கல நிகழ்வுகள் நடக்க வாய்ப்புள்ளது. அதே போல் உள்ளத்தில் நம்பிக்கை
பத்திஸ்டேட்ஸ் - 8 ருத்திகை விரதம் கி 608 அரோகரா னவரி 8 13 27 ுளமிகு 9 ஸ்ரீ முருதன் பெருமான் L602 செவ்வாய்க்கிழமை னியகாலை பெ6 கம் அங்காளிபகதன் ஏபாபா ணபதி 8 ருத்திகை விரதம் கி 608 அரோகரா னவரி 8 13 27 ுளமிகு 9 ஸ்ரீ முருதன் பெருமான் L602 செவ்வாய்க்கிழமை னியகாலை பெ6 கம் அங்காளிபகதன் ஏபாபா ணபதி - ShareChat