விடிந்தால் கல்யாணம் எனும்போது மணமகளின் முகத்தில் ஆசிட் அடித்ததுபோல, விடிந்தால் கும்பாபிஷேகம் எனும்போது கோவிலின் ஆகம வேலைப்பாடுகளை கடப்பாறையால் இடித்து சிதைத்த அறநிலையத்துறை ஆபீசர்!
எங்கள் ஈரோடு கருங்கல் பாளையம் காந்திசிலை எதிரே உள்ள அருள்மிகு ஓம்காளியம்மன் திருக்கோவிலின் கும்பாபிஷேகம் விடிந்தால் நடைபெற உள்ள நிலையில் யாகசாலை வேள்விகளும் பூஜைகளும் ஆகமவிதிப்படி தொடங்கப்பட்டன.
இந்நிலையில் கோவிலைப் பார்வையிடவந்த அறநிலையத்துறை அதிகாரியான பரஞ்சோதி என்பவர் மகாமண்டபத்தில் ஓம்காளியம்மன் முன்பும் துர்க்கையம்மன் முன்பும் சீலிங்கில் சிமெண்டினால் அழகிய வேலைப்பாடுடன் உருவாக்கப்பட்டிருந்த இரண்டு தாமரைகளையும் இடித்தால் மட்டுமே கும்பாபிஷேகம் நடைபெற அனுமதி கொடுப்பேன் என்று கூறியதாகவும் அதைஅடுத்து வேறுவழியில்லாமல் அந்த இரு தாமரைகளும் இடிக்கப்பட்டதாகவும் பக்தகோடிகள் தெரிவிக்கின்றார்கள்!
நேற்று மதியம் இன்று காலையில் கும்பாபிஷேகம் நடக்கின்ற நிலையில் இடிக்கப்பட்ட அந்த தாமரைகள் இருந்த இடத்தில் பெயிண்டினால் இடித்தது தெரியாதவண்ணம் ஏதேதோ அலங்கோலம் செய்துகொண்டிருந்தார்கள்!
தாமரை என்பது நமது பாரதத்தின் தேசிய மலராகும். தேசியப் பறவையான மயிலை கொல்வதோ, தேசியக்கொடியை அவமானப்படுத்துவதோ தண்டனைக்குரிய குற்றமாகும். அதேபோல் தாமரையை இடிக்க உத்தரவிட்ட அந்த அதிகாரிக்கு சட்டப்படி தண்டனை வழக்க வேண்டும் என்பதே தற்போது ஈரோடு மக்களின் பேச்சாக இருக்கின்றது.
தேசிய மலரான தாமரையையே இடிக்க உத்தரவிடும் இதுபோன்ற அதிகாரிகளை வைத்துக்கொண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலை நடத்தினால் தேர்தல் எப்படி நியாயமாக நடக்கும்?
எனவே ஒருசில ஆண்டுகள் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமுல்படுத்தி தமிழகத்தில் தேசியகீதம் பாடமாட்டோம், தேசிய மொழியை ஏற்கமாட்டோம், தேசிய கல்விக்கொள்கையை அமுல்படுத்தமாட்டோம், தேசிய மலரை எங்கும் வைகக் விடமாட்டோம், தேசிய நீரோட்டத்தில் கலக்க மாட்டோம், நவோதயா பள்ளிகளை திறக்க மாட்டோம் என்பதுடன் பிரதமர் வேண்டாம், கவர்னர் வேண்டாம், நீதிபதி வேண்டாம், மத்திய அரசு வேண்டாம், நீட் வேண்டாம் எஸ் ஐ ஆர் வேண்டாம், சநாதனம் வேண்டாம் என்போரையெல்லாம் ஒருவழி செய்துவிட்டு பிறகு தமிழக சட்டமன்ற தேர்தலை நடத்துவதுதான் நியாயமாக இருக்கும் என்பதும் தற்சமயம் ஈரோடு மக்களின் பேச்சாக இருக்கின்றது!
#🤔தெரிந்து கொள்வோம்


