#யேசுதாஸ் திரைப்படப் பாடகராக 1960களில் கால்பாடுகள் என்ற மலையாளத் திரைப்படத்தில் துவங்கினார். தமிழ்த் திரைப்படங்களில் எஸ். பாலச்சந்தரின் பொம்மையில் முதன்முதலாக "நீயும் பொம்மை, நானும் பொம்மை" என்ற பாடல் மூலம் அறிமுகமானார். ஆனால் முதலில் வெளியான படமாக கொஞ்சும் குமரி அமைந்தது. 1970களில் இந்தித் திரைப்படங்களில் பாடத்துவங்கினார். முதல் இந்தி மொழிப்பாடல் "ஜெய் ஜவான் ஜெய் கிசான்" என்ற திரைப்படத்திற்கு பாடினார். ஆயினும் அவர் பாடி வெளிவந்த முதல் இந்திப் படமாக "சோடிசி பாத்" அமைந்தது. இவற்றைத் தொடர்ந்து பல மொழிப்படங்களில் பல்லாயிரக்கணக்கானப் பாடல்களைப் பாடி பல விருதுகளையும் பெற்றார். 2006ஆம் ஆண்டு சென்னை ஏவிஎம் அரங்கில் ஒரேநாளில் நான்கு தென்னிந்திய மொழிகளிலும் 16 திரைப்படப் பாடல்களை பாடி சாதனை நிகழ்த்தினார்.
#பிறந்த_நாள் #கே ஜே யேசுதாஸ் ஹிட்ஸ் #hbd🎂 கே. ஜே. யேசுதாஸ் #பாடகர் கே. ஜே. யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதி #இளையராஜா கே ஜே யேசுதாஸ் #🎂HBD கே. ஜே. யேசுதாஸ்🎉


