ShareChat
click to see wallet page
search
*வரலாற்றில் இன்று* *01 ஜனவரி 2026-வியாழன்* *==========================* கி.மு.45 : ஜூலியஸ் சீஸர் செய்த காலண்டர் சீர்திருத்தத்தின் படி 365 நாட்கள் கொண்டது ஒரு ஆண்டு என நிர்ணயம் செய்யப்பட்டது. 630 : முகமது நபி தனது படைகளுடன் மெக்கா நோக்கிப் பயணமானார். 1001 : முதலாம் ஸ்டீபன் ஹங்கேரியின் மன்னராக அறிவிக்கப்பட்டார். 1068 : நான்காம் ரொமானஸ் துருக்கியின் அரசராக முடிசூடினார். 1515 : முதலாம் பிரான்சிஸ் பிரான்ஸின் மன்னராக முடிசூடினார். 1600 : ஸ்காட்லாந்து மார்ச் 25 ற்குப் பதிலாக ஜனவரி ஒன்றை ஆண்டின் ஆரம்ப நாளாக மாற்றிக்கொண்டது. 1651 : இரண்டாம் சார்லஸ் ஸ்காட்லாந்தின் மன்னராக முடிசூடினார். 1700 : ரஷ்யா கிரிகோரியன் நாட்காட்டியை பின்பற்ற ஆரம்பித்தது. 1707 : ஐந்தாம் ஜான் போர்ச்சுகலின் மன்னராக முடிசூடினார். 1752 : கிரிகோரியன் நாட்காட்டியை பிரிட்டன் ஏற்றுக்கொண்டது. 1772 : 90 ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தக்கூடிய உலகின் முதலாவது பயணிகள் காசோலை லண்டனில் விற்பனைக்கு வந்தது. 1776 : அமெரிக்கப் புரட்சிப் போர் :- அரசு கடற்படை மற்றும் அமெரிக்க விடுதலைப் படையினரின் நடவடிக்கையினால் வர்ஜினியாவின் நோர்போக் நகரம் தீப்பற்றி அழிந்தது. 1788 : தி டைம்ஸ் முதல் இதழ் லண்டனில் வெளியிடப்பட்டது. 1800 : டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி கலைக்கப்பட்டது. 1804 : ஹெயிட்டி பிரெஞ்சு ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றது. 1808 : அமெரிக்காவில் அடிமைகளை இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டது. 1858 : இலங்கையில் முதலாவது தந்தி சேவை கொழும்புக்கும், காலிக்கும் இடையே ஆரம்பமானது. 1866 : யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக காவல்துறை அமைக்கப்பட்டது. 1867 : அமெரிக்காவில் சின்சினாட்டி நகருக்கும் கொவிங்டன் நகருக்கும் இடையே ஜான் ரோப்லிங் தொங்கு பாலம் திறக்கப்பட்டது. இதுவே உலகின் அதி நீள தொங்குபாலம் ஆகும். 1872 : இலங்கையில் ரூபாய் மற்றும் சதம் ஆகிய நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 1876 : பிரிட்டனில் வாணிப உரிமைச் சின்னம் பதிவு செய்யும் முறை வந்தது. 1877 : விக்டோரியா இந்தியாவின் மகாராணியாக டெல்லியில் அறிவிக்கப்பட்டார். 1880 : இந்தியாவில் தபால் அலுவலகங்களில் மணியார்டர் முறை ஆரம்பமானது. 1883 : இலங்கையின் தமிழர் தாயகம் வடக்கு, கிழக்கு என இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. 1886 : பர்மாவை விக்டோரியா மகாராணிக்கு அவரது பிறந்தநாள் பரிசாக வழங்கப்பட்டது. 1890 : எரித்ரியா இத்தாலிய குடியேற்ற நாடாக ஆக்கப்பட்டது. 1891 : ஜெர்மனியில் முதியோர் ஓய்வூதியம் கொண்டு வரப்பட்டது. 1893 : ஜப்பானில் கிரிகோரியன் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. 1900 : நெதர்லாந்தில் கட்டாயக் கல்வி நடைமுறைக்கு வந்தது. 1901 : நைஜீரியா பிரிட்டனின் முதலாவது காப்பரசானது. 1904 : லண்டனில் வாகனங்களைப் பதிவு செய்து அதன் எண் தகட்டினை காரில் மாட்ட வேண்டும் என்ற வாகன சட்டவிதி அமலுக்கு கொண்டுவரப்பட்டது. 1906 : இந்தியாவின் சீர்தர நேரம் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1910 : விமானம் ஓட்டுவதற்கான லைசென்ஸ் முறை பிரான்ஸில் ஆரம்பிக்கப்பட்டது. 1912 : நியூசிலாந்தில் விதவைகள் ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 1919 : ஸ்காட்லாந்தில் அயோலயர் என்ற கப்பல் மூழ்கியதில் 205 பேர் உயிரிழந்தனர். 1925 : நார்வே தலைநகர் கிறிஸ்டியானாவின் பெயர் ஒஸ்லோ என்று மாற்றப்பட்டது. 1927 : துருக்கியின் நாட்காட்டி 18/12/1926 க்கு பதிலாக 01/01/1927 ஆக மாற்றப்பட்டது. மெக்ஸிகோவில் கத்தோலிக்க மதத் தடையை எதிர்த்து மதத் தீவிரவாதிகள் அரசுடன் போர் தொடுத்தனர். 1928 : ஜோசப் ஸ்டாலினின் தனிச் செயலரான போரிஸ் பசனோவ் சோவியத் ஒன்றியத்தில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள எல்லை கடந்து ஈரான் சென்றார். 1935 : இத்தாலிய குடியேற்ற நாடுகளான திரிப்பொலி, சிரெனாய்க்கா ஆகியன சேர்ந்து லிபியா ஆனது. 1945 : இரண்டாம் உலகப்போர் :- மால்மெடி படுகொலைகளுக்கு எதிர் தாக்குதலாக அமெரிக்கா பெல்ஜியத்தில் 60 ஜெர்மனி போர் கைதிகளை கொன்றது. 1947 : பிரிட்டனில் நிலக்கரிச் சுரங்கங்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. 1948 : பிரிட்டனில் ரயில் சேவைகள் தேசியமயமாக்கப்பட்டது. பிரிவினைக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு வழங்குவதாக ஒப்புக்கொள்ளப்பட்ட 550 மில்லியன் ரூபாய் பணத்தை இந்தியா தர முடியாதென அறிவித்தது. 1949 : ஐ.நா. அறிவுறுத்தலின்படி பாகிஸ்தானுடனான இந்தியப் போர் முடிவுக்கு வந்தது. 1956 : எகிப்து-பிரிட்டன் ஆகியவற்றிடம் இருந்து சூடான் விடுதலை பெற்றது. 1958 : இலங்கையில் வாகன எண் தகடுகளில் சிங்கள மொழியில் ஸ்ரீ எழுத்து கட்டாயமாக்கப்பட்டது. 1959 : கியூபாப் புரட்சி :- கியூபாவின் ஜனாதிபதி புல்ஜென்சியோ பாடிஸ்டா, பிடல் காஸ்ட்ரோவின் படைகளினால் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். 1960 : கேமரூன் பிரான்ஸிடம் இருந்து விடுதலை அடைந்தது. 1962 : சமோவா நியூசிலாந்திடம் இருந்து விடுதலை பெற்றது. 1965 : ஆப்கானிஸ்தானின் மக்கள் ஜனநாயக கட்சி காபூலில் நிறுவப்பட்டது. 1971 : அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் சிகரெட் விளம்பரங்கள் தடை செய்யப்பட்டன. 1978 : ஏர் இந்தியா போயிங் விமானம் வெடித்து பம்பாய் அருகே கடலில் விழுந்து மூழ்கியதில் 213 பேர் உயிரிழந்தனர். 1979 : சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தூதரக உறவு நடைமுறைக்கு வந்தது. 1981 : பெங்களூர் தொலைக்காட்சி நிலையம் துவங்கப்பட்டது. கிரேக்கம் ஐரோப்பிய சமூகத்துடன் இணைந்தது. பலாவு குடியரசு அமெரிக்காவின் அதிகாரத்துள் சுயாட்சி பெற்றது. 1984 : பிரிட்டனிடமிருந்து புருணே விடுதலை அடைந்தது. 1985 : பிரிட்டனில் முதன்முதலில் செல்போன் தொடர்பை வோடபோன் நிறுவனம் ஏற்படுத்தியது. 1989 : ஓசோன் குறைபாட்டை ஏற்படுத்தும் வேதிப் பொருட்களை தடை செய்யும் மாண்ட்ரீல் உடன்பாடு நடைமுறைக்கு வந்தது. 1993 : செக்கோஸ்லோவாகியா நாடு செக் குடியரசு, ஸ்லோவாக் குடியரசு என இரு நாடுகளாக பிரிந்தது. 1995 : உலக வர்த்தக அமைப்பு உருவானது. ஆஸ்திரியா, பின்லாந்து, ஸ்வீடன் ஆகியன ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தன. 1999 : 11 ஐரோப்பிய நாடுகளில் யூரோ நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2007 : இந்தோனேஷியாவின் மக்காசார் ஜலசந்தி பகுதியில் விமானம் ஒன்று 102 பேருடன் மூழ்கியது. 2008 : கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். 2009 : தாய்லாந்து, பாங்காக் நகரில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் 66 பேர் உயிரிழந்தனர். 2010 : பாகிஸ்தானில் கைப்பந்தாட்ட போட்டி ஒன்றில் தற்கொலை கார் குண்டு வெடித்ததில் 105 பேர் உயிரிழந்தனர். 2011 : எகிப்து, அலெக்சாண்ட்ரியாவில் கிறிஸ்தவர்களின் புத்தாண்டு கொண்டாட்டத்தில் குண்டு வெடித்ததில் 23 பேர் கொல்லப்பட்டனர். எஸ்டோனியா யூரோ நாணயத்தை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்டது. 2013 : கோட் டிவார், அபிஜான் நகரில் விளையாட்டு அரங்கில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 60 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயமடைந்தனர். 2017 : துருக்கி, இஸ்தான்புல் நகரில் இரவு விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்டத் தாக்குதலில் 39 பேர் கொல்லப்பட்டனர். 2019 : ஓரினத் திருமணம் ஆஸ்திரேலியாவில் சட்டப்பூர்வமானது. #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 #தெரிந்து கொள்வோம் #😎வரலாற்றில் இன்று📰
🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 - 350 10 २० P N 320 330 340  ೦ % 310 8 % ನ n UIIITTIIU &क 02 081 081 021 091 / 350 10 २० P N 320 330 340  ೦ % 310 8 % ನ n UIIITTIIU &क 02 081 081 021 091 / - ShareChat