🌹ஆரூரில் பிறக்க முக்தியா?
நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏
திருவாரூரில் பிறந்தாலே முக்தி கிடைக்கும் என்பது சைவர்களின் தொன்மையான நம்பிக்கை.....
இந்த நம்பிக்கைக்கு பிரமாணம் எந்த நூலில் உள்ளது ?
அல்லது இப்படி நம்பிக்கை ஏற்பட எது அடிபடையாக உள்ளது காண்போம்.
இதற்கு நமிநந்தியடிகள் புராணத்தை படிக்க வேண்டும்....
திருவாரூர்ப்பெருமான் பங்குனி உத்தரப் பெருவிழா நாட்களில் ஒரு நாள் மணலி என்ற ஊருக்குத் திருவுலா எழுந்தருளினார். எல்லாக் குலத்து மக்களும் இறைவன் உடன் தரிசித்துச் சென்றனர்.
நமிநந்தியடிகளும் அவர்கள் எல்லாருடனும் உடன் சென்று கண்டு மகிழ்ந்தார். திருக்கோயிலுக்குச் செல்ல மாலைப்பொழுதாயிற்று. நமிநந்தியடிகள் நள்ளிருளில் தமது ஊரையடைந்து வீட்டினுள்ளே புகாமல் புறத் திண்ணையிலே படுத்துத் துயின்றார். அப்பொழுது அவர் மனைவியார் வந்து அவரைத் ‘துயிலுணர்த்தி வீட்டினுள்ளே எழுந்தருளிச் சிவார்சனையையும் தீவளர்த்தலையும் முடித்துக்கொண்டு பள்ளிகொள்ளலாம்’ என்றார்.
அதுகேட்ட நமிநந்தியடிகள், ‘இன்றைய தினம் ஆரூர்ப்பெருமான் திருமணலிக்கு எழுந்தருளியபோது யானும் உடன் சேவித்து சென்றேன். அக்கூட்டத்தில் எல்லாச் சாதியரும் கலந்திருதமையால் தீட்டுண்டாயிற்று. ஆதலால் நீராடிய பின்னரே மனைக்குள் வருதல் வேண்டும். குளித்தற்கு தண்ணீர் கொண்டுவா’ என்று சொல்ல மனைவியாரும் விரைந்து சென்றார். அதற்கிடையில் நமிநந்தியடிகளுக்கு சிறிது உறக்கம் வந்தது. அப்பொழுது வீதிவிடங்கற் பெருமான் கனவில் தோன்றி, ‘அன்பனே! திருவாரூரிலே பிறந்தார் எல்லோரும் நம்முடைய கணங்கள். அதை நீ காண்பாய்’ என்று சொல்லி மறைந்தருளினார். உறக்கம் நீங்கி விழிந்தெழுந்த நமிநந்தியடிகள், தாம் அடியார்களிடையே சாதிவேறுபாடு நினைந்தது தவறென்றுணர்ந்து எழுந்தபடியே வீட்டினுள்ளே சென்று சிவபூசையைன் முடித்து மனைவியாருக்கு நிகழ்ந்ததைச் சொன்னார். பொழுது விடிந்தபின் திருவாரூருக்குச் சென்றார். அப்பொழுது திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லாரும் சிவசாரூபம் பெற்ற 🌹சிவ கணங்களாக தோன்றக் கண்டார். ‘அடியேன் செய்த பிழை பொறுத்தருள வேண்டும்’ என்று ஆரூர்ப்பெருமானை இறைஞ்சிப் போற்றினார்.
இந்நிகழ்வின் மூலம் ஆரூரும் கயிலையும் வெவ்வேறு இல்லை என்பதை அறியலாம்.
ஆக ஆரூரில் பிறக்கும் உயிர்கள் எதுவாயினும் முக்தி கைகூடும்...
உடனே மற்றோர்க்கு கேள்வி எழும் சிலருக்கு ஆருரில் பிறந்து வாழும் கொலை தொழில் புரிவோர்க்கும் ,அடியோர் அல்லாதவர்க்கும் முக்தி கிடைக்குமா?
நிச்சயம் கிடைக்கும்.... யாராய் இருந்தாலும் முன்னம் செய்த தவத்தின் பயனாகவே ஆருரில் பிறப்பர்.
புண்ணியம் இருவகை ;
சுப புண்ணியம், அபபுண்ணியம்
இறைவர் யார் என்று உணர்ந்து வழிபாடு செய்வோர்க்கு சுபபுண்ணியம் சேரும்....உதாரணம் நம் சிவனடியார்கள்...
அபபுண்ணியம் செய்பவர்கள் பிறசமயத்தார்..மற்றும் இறைவனை தொழாதவர்களை குறிக்கும்...இப்படிபட்டவர்கள் திருவாரூரிலும் உண்டு.இவர்களுக்கு எப்படி முக்தி கிடைக்கும் எனும் கேள்வி எழும்.....
இவர்கள் இறைவனை நம்பவில்லை என்றாலும் தினமும் இறைவர் உறையும் கோயிலையும்,திருக்குளம், திருத்தேர், ஆரூர் இறைவரின் நாமஓலி ஆகியவற்றை தொடர்ந்து காணும்,கேட்கும் பேறு பெற்றமையால் அப புண்ணியம் கிடைக்க பெற்று அடியார்களை விட சற்று தாமதமாக வினைகழிய பெற்று முத்தி பெறும் தன்மையை அடைகின்றனர்.....
சுருங்க சொன்னால் ..
1.ஆரூரில் வாழ்வோர் யாவரும் சிவகணங்கள்...
2.இதை நமிநந்தியடிகள் புராண வாயிலாக இறைவர் அறிவித்து விட்டார்.
3.கயிலை வேறு ஆருர் வேறுஇல்லை.
4.அத்தகு ஆரூரில் பிறக்க தவம் வேண்டும்...அத்தவத்தின் பயனால் பிறக்கும் எல்லா உயிரும் முத்தி அடைகிறது.
5.அடியோர்களுக்கு முக்தியை எளிதாகவும்,மற்றோர்க்கு வினைதீர்க்க வைத்தும் இறைவர் அருள்கிறார்.
திருவாரூர் பிறந்தார்கள் எல்லோர்க்கும் அடியேன்... என்பது சுந்தரர் திருவாக்கு....
வன்தொண்டர் நாமம் வாழ்க
திரு அம்பலத்தரசன் திருவடி சரணம் 🙏🏼
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹
சிவாய நம🙇 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும். #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐
00:26

