திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகில் உள்ளது உத்தமபாளையம்.. இங்குள்ள வட்டமலை அணைப் பகுதியில் கடந்த 6ம் தேதி ஒரு பெண் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வெள்ளகோவில் போலீசுக்கு விஷயம் சென்றது..
திருப்பூர் வடிவுக்கரசி
விரைந்து வந்த காவல்துறையினர் இந்த கொடூரக் கொலை குறித்து உடனடியாக விசாரணையை தொடங்கினர்... மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.. அப்போதுதான், கொலை செய்யப்பட்டவர் வடிவுக்கரசி என்ற 45 வயது பெண் என்பது தெரியவந்தது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி, நெய்க்காரப்பட்டிப் பகுதியைச் சேர்ந்தவராம்.. இவரை சம்பவத்தன்று ஸ்கூட்டரில் அழைத்து வந்தது, அதே ஊரை சேர்ந்த முன்னாள் காவல்துறை அதிகாரியான 55 வயது சங்கர் என்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
சங்கருக்கு 4 மனைவிகள்
சங்கர் தான் வடிவுக்கரசியை கொலை செய்துள்ளார் என்பது தெரிந்ததுமே, போலீசார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.. இறுதியில், தாராபுரத்தை அடுத்த அலங்கியம் பகுதியில் மறைந்திருந்தபோது போலீசார் சங்கரை சுற்றி வளைத்து கைது செய்தனர்... விசாரணையையும் துவங்கினர்.
அப்போது சங்கர் போலீசாருக்கு அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை தந்துவிட்டதாம்,.. அதாவது சங்கருக்கு 4 மனைவிகள், 3 மகள்கள், 3 மகன்கள் இருக்கிறார்களாம்.. சங்கர் போலீசாக பணியாற்றி 1998-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றவர்.. 4 மனைவிகளையும் தாண்டி, வடிவுக்கரசி என்ற பெண்ணுடன் சங்கருக்கு கள்ளக்காதல் இருந்துள்ளது.
அரசு வேலைக்கு பணம்
இவர்கள் 2 பேரும் சேர்ந்து, அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி, சிலரிடம் பணம் வாங்கியிருக்கிறார்கள்.. அந்த பணத்தை இருவருமே செலவு செய்துவிட்டார்கள்.. வேலை வாங்கித் தரமுடியாததால், பணம் கொடுத்தவர்கள் வடிவுக்கரசியை நெருக்க ஆரம்பித்தனர். இதனால் வடிவுக்கரசி, சங்கரிடம் பணத்தை திருப்பிக் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதுதான் கள்ளக் காதலர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டைக்கு காரணமாக இருந்து வந்துள்ளது..
வடிவுக்கரசியின் டார்ச்சர் நாளுக்கு நாள் அதிகமாகவும், அவரை எப்படி சமாளிப்பதென தெரியாமல் சங்கர் திணறி வந்துள்ளார்.
ஸ்கூட்டரில் வடிவுக்கரசி
சம்பவத்தன்று வடிவுக்கரசிடம், என்னுடைய 4 மனைவிகளில் ஒருவரின் சொந்த ஊர் வெள்ளகோவில் அருகிலுள்ள தாசநாயக்கன்பட்டி.. இங்கு ஒருவர் எனக்கு பணம் தருவதாக சொல்லி உள்ளார்.. அந்த பணத்தை வாங்கி உனக்கு தருகிறேன் என்று சொல்லி வடிவுக்கரசியை ஸ்கூட்டரில் அழைத்து வந்துள்ளார்...
வரும் வழியிலேயே வட்டமலை அணைப்பகுதியில் மது வாங்கி 2 பேரும் குடித்திருக்கிறார்கள்.. அப்போது மறுபடியும் இவர்களுக்குள் பணப்பிரச்சனை எழுந்துள்ளது..
ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த சங்கர், வடிவுக்கரசியின் பேச்சுக்களால் மேலும் ஆவேசமடைந்தார்.. உயிரோடு இருந்தால்தானே பணம் கேட்டுத் தொந்தரவு செய்வாய்? என்று முடிவு செய்து, கீழே கிடந்த கருங்கல்லை எடுத்து வடிவுக்கரசியின் தலையில் போட்டுள்ளார். இதில் துடிதுடித்து வடிவுக்கரசி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
6 சவரன் தங்க நகை
பிறகு, வடிவுக்கரசி அணிந்திருந்த 6 பவுன் நகையை எடுத்துக் கொண்டு, வடிவுக்கரசியை அடையாளம் தெரியாத அளவுக்கு முகத்தை சிதைத்து, தீ வைத்து கொளுத்திவிட்டாராம்.. இவ்வளவும் சங்கர் போலீசில் வாக்குமூலமாக கூறியிருக்கிறார்..
இதையடுத்து, சங்கரிடம் இருந்து 6 பவுன் நகையைப் பறிமுதல் செய்த போலீசார், அவரைக் காங்கயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்...
4 மனைவிகளுடன் சங்கர் வாழ்ந்து வரும் நிலையில், வடிவுக்கரசிக்கும் ஏற்கனவே கல்யாணமாகி கணவர், ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்களாம்...! #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #📺டிசம்பர் 11 முக்கிய தகவல் 📢


