ShareChat
click to see wallet page
search
#📰டிசம்பர் 15 முக்கிய தகவல்கள் 🗞 #📺அரசியல் 360🔴 #🎙️அரசியல் தர்பார் #📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 உலக நாடுகளுக்கு ஒரு பணிவான கோரிக்கை வைக்கிறேன். அண்டார்ட்டிக்கா, கிரீன்லாந்து உள்ளிட்ட பகுதிகளில் குடியேற்றங்களை எழுப்பி அரசாங்கங்களை உருவாக்கினால் எங்கள் பிரதமர் அங்கேயும் பயணம் செய்து உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஒரே பிரதமர் என்கிற மகத்தான சாதனை புரிந்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிப்பார். ஒரு நாள் கூட அலுவலக விடுப்பு எடுக்காமல் இப்படி ஓயாமல் 12 ஆண்டுகளாக வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வரும் இப்படி ஒரு பிரதமர் வேறெந்த நாட்டிலும் பிறக்காமல் இந்தியாவில் பிறந்தது எங்கள் பூர்வ ஜென்ம பாக்கியம். இதற்கு முன்னர் 80+ நாடுகளை சுற்றி வந்ததன் பயனாக தான் இப்போது டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு 90 ஆக உயர்ந்து இந்தியர்களை பெருமைப்படுத்தியுள்ளது. இப்போது ஜோர்டன், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய 3 நாடுகளுக்கு செல்கிறார். இந்த சுற்றுப்பயணம் முடித்துக் கொண்டு இந்தியா திரும்பியவுடன் செய்தியாளர்களை சந்தித்து இந்நாடுகளுக்கு சென்றதால் இந்த திட்டங்களை வகுத்துள்ளோம் என கலந்துரையாடுவார் என நீங்கள் நினைப்பீர்கள். அதெல்லாம் சாதாரண நேரு, இந்திராகாந்தி போன்ற பிரதமர்கள் தான் செய்வார்கள். எங்கள் பிரதமர் அப்படி இல்லை. இந்தியா திரும்பிய மறுநாள் காலையில் ஏதாவது ஒரு கோயிலில் பஜனை செய்து மக்களின் முன்னேற்றத்திற்காக பிரார்த்தனை செய்வார். உலக நாடுகள் ஒன்றை நன்றாக புரிந்துக் கொள்ள வேண்டும். எங்கள் நாட்டில் அன்றாடம் கோயில்களை கட்டுவது, கடவுள் சிலைகள் எழுப்புவது, பிரார்த்தனைகளை செய்வது, பகவத் கீதை புராணம் பாடுவது, வந்தே மாதரம் விவாதம் நடத்துவது, இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரம் செய்வது உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான காரியங்களை திறம்பட செய்வதற்காக உலக அறிவை பெறுவதற்காக தான் எங்கள் பிரதமர் அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்கிறார் என்கிற உன்னத நோக்கத்தை அனைவரும் உள்வாங்கி கொள்ள வேண்டும். ஆனால் ஒரு விஷயம் தான் எங்களை அச்சப்படுத்துகிறது. இன்னும் 50 ஆண்டுகளுக்கு பின்னர் வரும் சந்ததியினர் "நீங்கள் எல்லாம் சோற்றில் உப்பு போட்டு தான் சாப்பீட்டீர்களா...?" என எள்ளி நகைத்து எங்கள் முகங்களில் காரி உமிழ்வார்களே...என்பதை நினைத்தால் தான் அவமானமாக உள்ளது!!!
📰டிசம்பர் 15 முக்கிய தகவல்கள் 🗞 - 2olimer NEWS 0901 00BAD பிர தமர் பயணம் அடுத்த வாரம் ஜோர்பான் எத்தியோப்பியா, ஒமன் நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் நாடுகளுடனான உறவை வலுப்படுத்தும் வகையில் 3 15 ஆம் தேதி சுற்றுப் பயணம் முதல் @X /Polimernews 12-12-2025 2olimer NEWS 0901 00BAD பிர தமர் பயணம் அடுத்த வாரம் ஜோர்பான் எத்தியோப்பியா, ஒமன் நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் நாடுகளுடனான உறவை வலுப்படுத்தும் வகையில் 3 15 ஆம் தேதி சுற்றுப் பயணம் முதல் @X /Polimernews 12-12-2025 - ShareChat