#azagaana vaalkkay thathuvam வேதனைப் படுத்தியவர்களை வேரோடு மறந்து விடுங்கள்...
அன்பு செலுத்துபவர்களை ஆயுள் வரை
மறந்து விடாதீர்கள்...
வருத்தம் அளிக்கும் பழைய விஷயங்களை
விலக்கி விடுங்கள்...
மகிழ்ச்சி அளிக்கும் புது விஷயங்களில் மனம் நாடுங்கள்..
வீழ்த்த நினைத்தவர்களை விட்டுத்
தள்ளுங்கள்...
காலம் அவர்களை வீழ்த்தி விடலாம்
காத்திருங்கள்..
பொல்லாதவர்களின் பேச்சைக் கேட்பவர்களுக்குத் தான் நஷ்டம்..
விரைவில் அவர்களும் உணர்வார்கள்
காத்திருங்கள்..
உயர்த்தி விட்டவர்களை உதாசீனம்
செய்யாதீர்கள்...
வாழ்க்கை நமக்காக அடுத்துக் கொடுக்கப்
போகும் நல்ல விஷயங்களைப் பாருங்கள்...
எடுத்துச் சென்றதையும், போனதையும் விட்டு விடுங்கள்...
கிடைத்த நல்ல விஷயங்களை எண்ணிப் பாருங்கள்... ஆறுதல் பெறுங்கள். நன்றி உணர்வோடு இருங்கள்.
போக விட்டு, பின்னாளில் அதை நினைத்து வருந்தாதீர்கள்.
நிலைமை மாறலாம்...
மனிதர்கள் மாறலாம்.ஒன்று நிச்சயம்.. வாழ்க்கை நகர்ந்து கொண்டு தான் இருக்கும்.
😊


