ShareChat
click to see wallet page
search
ஸ்ரீகிருஷ்ணரின் புல்லாங்குழல் உண்மையில் சௌபாக்கியத்தை ஊதி விடுமா?🔱 ஸ்ரீகிருஷ்ணரின் புல்லாங்குழல் உண்மையில் சௌபாக்கியத்தை ஊதி விடுமா? ஆன்மிகம் சொல்லும் அதிர்ச்சி உண்மை! 📜 சமீபத்தில் ஒரு கடைத்தெருவில் நடந்த சிறிய சம்பவம், ஒரு பெரிய ஆன்மிக சந்தேகத்திற்குத் தூண்டுகோலாக அமைந்தது. ஒரு பெண்மணி கடைக்காரரிடம், “கிருஷ்ணர் பொம்மை வேண்டும்” என்று கேட்டார். கடைக்காரரும் புன்னகையுடன், புல்லாங்குழல் கையில் வைத்திருக்கும் ஸ்ரீகிருஷ்ணர் பொம்மையை எடுத்துக் கொடுத்தார். அதைப் பார்த்தவுடன் அந்தப் பெண்மணி பதறி, “இது வேண்டாம்… புல்லாங்குழல் இல்லாத கிருஷ்ணர் இருந்தால் கொடுங்கள்” என்றார். அவரின் வார்த்தைகள் என்னை அதிர வைத்தன. “ஏன்?” என்று கேட்டபோது, “புல்லாங்குழல் வைத்த கிருஷ்ணரை வீட்டில் வைத்தால், நம்முடைய சௌபாக்கியம் எல்லாம் ஊதி விடுவார் என்று சொல்கிறார்கள்” என்றார். இந்த நம்பிக்கை எங்கிருந்து வந்தது? கிருஷ்ணர் தனது பக்தர்களின் வாழ்க்கையையே காலியாக்குவாரா? இந்த சந்தேகம் என்னை ஆன்மிக நூல்களை நோக்கி இட்டுச் சென்றது. 🌿 ஆன்மிக நூல்கள் சொல்லும் உண்மை பகவான் ஸ்ரீகிருஷ்ணரை வழிபட வேண்டுமென்றால், அவரை கிருஷ்ணராகவே வழிபட வேண்டும். அதாவது, புராணங்களில் எவ்வாறு வர்ணிக்கப்படுகிறாரோ, அவ்வாறே அவரது உருவமும் இருக்க வேண்டும். இதற்குச் சிறந்த ஆதாரம் பிரம்ம ஸம்ஹிதை. பிரம்மதேவர் கூறுகிறார்: “வேணும் க்வணந்தம் அரவிந்த தலாயதாக்ஷம் பர்ஹாவதம்ஸம் அஸிதாம்புத சுந்தராங்கம் கந்தர்ப கோடி கமனீய விஷேஷ ஷோபம் கோவிந்தம் ஆதி புருஷம் தம் அஹம் பஜாமி” இதன் பொருள்: “புல்லாங்குழலை வாசிப்பவரும், தாமரை போன்ற கண்களை உடையவரும், மயிலிறகை சூடியவரும், மேகநிற மேனியுடன், கோடிக்கணக்கான மன்மதர்களையும் மயக்கும் அழகுடைய ஆதி புருஷனான கோவிந்தனை நான் வணங்குகிறேன்.” 🔔 தெய்வங்களின் அடையாளங்கள் மோதகம் இல்லாத விநாயகரை நாம் நினைப்பதில்லை சங்கு, சக்கரம் இல்லாத மகாவிஷ்ணுவை காணமாட்டோம் வில் இல்லாத ராமரை தரிசிக்க முடியாது மான், மழு இல்லாத சிவபெருமானையும் கற்பனை செய்ய முடியாது அப்படியிருக்க, புல்லாங்குழல் இல்லாத கிருஷ்ணர் — கிருஷ்ணரே அல்ல. புல்லாங்குழல் என்பது, கிருஷ்ணர் பக்தர்களின் அகங்காரத்தை ஊதி அகற்றி, பரமானந்தத்தை நிரப்பும் கருவி. அது சௌபாக்கியத்தை அழிப்பதல்ல — சௌபாக்கியத்தை ஈர்க்கும் தெய்வீக ஒலி. 🌼 முடிவுச் செய்தி நமக்கு ஏற்படும் நல்லதும் கெட்டதும் தெய்வங்களின் உருவத்தால் அல்ல. அது நம்முடைய கர்ம வினைப் பயன். ஆகையால், புல்லாங்குழல் வைத்திருக்கும் ஸ்ரீகிருஷ்ணரை எந்த அச்சமும் இன்றி, முழு நம்பிக்கையுடன் வழிபடலாம். அவர் எதையும் ஊதி விடுவதில்லை… உயிரையே நிரப்புகிறார். Nantri appar #🙏பெருமாள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙏கிருஷ்ணா
🙏பெருமாள் - கண்ணெதிரே தெரியும் D தவறுகளை முதலில் ன்னிடம் இருந்து சரிசெய்ய துவங்கு இதுவே மாற்றத்தின் மசரியான துவக்கம்" KK கண்ணெதிரே தெரியும் D தவறுகளை முதலில் ன்னிடம் இருந்து சரிசெய்ய துவங்கு இதுவே மாற்றத்தின் மசரியான துவக்கம்" KK - ShareChat