ShareChat
click to see wallet page
search
♦️♦️தை பூசம் ஸ்பெஷல்: 8 ********************************* 🌹🌹முருகனின் அருள் பெற தைபூசம் திருநாளில் நாம் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? தமிழ் கடவுள் முருகனின் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைபூசம். ஆறுமுகனுக்கு நான்கு நட்சத்திரங்கள் உகந்தது. உலகம் தோன்றிய நாள், ஈசன் உமாதேவியுடன் ஆனந்த நடனம் ஆடி தரிசனம் அளித்த நாள் தை பூச திருநாள். மறக்காமல் தடைப்பட்டு வரும் திருமண பேச்சை தொடங்க பூசம் நாள் சிறந்தது என்பதால் உடனே தொடங்கி முருகனின் அருளால் திருமண பாக்கியம் பெறுங்கள். 🌹🌹முருகனும் தைபூசமும்: ********************************* தமிழ் கடவுள் முருகனின் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைபூசம். முருகனுக்கு நான்கு நட்சத்திரங்கள் உகந்தது. 1. வைகாசி விசாகம் - முருகன் தோன்றிய நாள் வைகாசி விசாகம் திருநாள் 2. கார்த்திகை - அறுவராக உதித்த முருகன் சக்தியின் துணையால் ஒருவனான நாள் கார்த்திகை திருநாள்.அசுரர்களை அழித்து, அவர்களை ஆட்கொண்ட நாள் ஐப்பசியில் வரும் சஷ்டி. 3. பங்குனி உத்திரம். - வள்ளியை திருமணம் புரிந்த நாள் பங்குனி உத்திரம் திருநாள். 4.தை பூசம் - அன்னையிடம் வேல் வாங்கி, திருக்கையில் வேல் ஏந்திய நாள் தான் தை பூசம் திருநாள். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பா ன். கரம் கூப்பிய பக்தர்களை தேடி கந்தன் வருவான். யாமிருக்க பயமேன் என அபயம் காட்டும் கடவுள் முருகப்பெருமான். தை பூசம் மறுநாள் பெரும்பாலும் பௌர்ணமி யாக இருக்கும். 27 நட்சத்திரங்களில் 8வது நட்சத்திரம் பூச நட்சத்திரம். இதனை புஸ்ய நட்சத்திரம் என்பார்கள். இது சனியின் நட்சத் திரம், ஆனால் இதன் அதிதேவதையாக குரு பகவான் வருகின்றார். இதன் காரணமாக அறிவு, தெளிவு, ஞானம் தரும் நாளாகவும், தொட்டதெல்லாம் துலங்கும் நாளாக தை பூச திருநாள் அமைகிறது. 🌹🌹பூசத்தின் சிறப்புகள்: ******************************* எந்த காரியமும் பூசத்தில் செய்தால் அல்லது தொடங்கினால் பூர்த்தி ஆகும் என்பார்கள். அதனால் திருமணத் தடை உள்ளவர்கள், பூச நட்சத்திரத்தில் திருமண பேச்சை தொடங்கி னால் விரைவில் திருமணம் ஆகும் என்பது ஐதீகம். பள்ளியில் சேர்க்காத சிறு குழந்தைகளுக்கு, இந்த நாளில் வீட்டிலேயே கல்வியை தொடங்க அந்த குழந்தை முருகனைப் போல அறிவார்ந் த குழந்தையாக இருக்கும். உத்தராயண காலத்தின் தொடக்க மாதமான தை மாதம் பார்க்கப்படுகிறது. அதாவது தேவர் களின் பகல் பொழுது தொடங்குவதாக புராண ங்கள் தெரிவிக்கின்றன. சூரியனை நாராயணன் என சொன்னாலும், ஜோதிடத்தில் அவர் சிவனின் அம்சம். சந்திர ன் சக்தியின் அம்சம். பெளர்ணமி என்பது சூரியன் - சந்திரன் ஒரே நேர் கோட்டில் நிற்பது தான். மகரம் எனும் புண்ணிய ராசியில் சூரிய னும், தன் சொந்த வீட்டில் சந்திரனும் நிற்க தை பூச திருநாள் அமைகிறது. மகா விஷ்ணு தன் மார்பில் மகா லட்சுமியை வைத்திருக்கிறார். சிவபெருமானோ தன் உட லின் ஒரு பாகத்தை உமையாளுக்குக் கொடு த்திருக்கிறார். பிரம்மா தன் மனைவியான சரஸ்வதியை நாக்கிலே வைத்திருக்கிறார். முருகன் தான்னை வணங்கும் பக்தர்களை தன் மனதில் வைத்திருக்கிறார் என்பது புரா ணங்கள். முருகன் சோதித்து பார்ப்பார் என சொல்லப்பட்டாலும், அவர் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரக் கூடியவர். 🌹🌹உலகம் தோன்றிய நாள் *********************************** ஆண்டி கோலத்தில் நிற்கும் முருகனுக்கு அன் னை பார்வதி தேவி வேல் வழங்கிய நந்நாள் தை பூசம். உலகம் தோன்றிய நாள் எனவும், ஈசன் - உமா தேவியுடன் ஆனந்த நடனம்ஆடி தரிசனம் அளி த்த நாள் தை பூச திருநாள். முருகப்பெருமானின் அருளைப் பெறுவதற்கு தைப்பூச நாளில் ஆலயம் சென்று வழிபாட்டா ல் போதும். காவடி எடுத்தல், அலகு குத்துதல், உள்ளிட்ட வேண்டுதல் இருந்தால் நிறைவேற்றலாம். தீராத நோய் ஏற்பட்டு அவதிப்படுவோர், முருக னுக்கு பால் காவடி எடுக்க நோய் தீரும் என்பது ஐதீகம்.பால் காவடி என்பதும் பால் குடம் என்ப தும் ஒன்று தான். மறக்காமல் தடைப்பட்டு வரும் திருமண பேச் சை தொடங்க பூசம் நாள் சிறந்தது என்பதால் உடனே தொடங்கி முருகனின் அருளால் திரும ண பாக்கியம் பெறுங்கள். 🌹கந்தா சரணம்.... ஷண்முகா சரணம்.... 🌹29.01.2026... நேசமுடன் விஜயராகவன்.... #🔯திருமண பரிகாரங்கள்🙏🏻 #✡️தோஷ பரிகாரங்கள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🕉️ஓம் முருகா
🔯திருமண பரிகாரங்கள்🙏🏻 - Reels ஜயராகவன் கவலைப்படாதே கடன், பகை நோய் இல்லாதசிறப்பான 10 விஜயராகவன் வாழ்க்கை னக்குகிடைக்க செய்கிறேன் சரவண்_வல ஓம் என்ஜgவணங்கி பதிவிடு. ngalam Sisters Azhagella Reels ஜயராகவன் கவலைப்படாதே கடன், பகை நோய் இல்லாதசிறப்பான 10 விஜயராகவன் வாழ்க்கை னக்குகிடைக்க செய்கிறேன் சரவண்_வல ஓம் என்ஜgவணங்கி பதிவிடு. ngalam Sisters Azhagella - ShareChat