#🙏ஆன்மீகம் #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் ##🔍ஜோதிட உலகம் 🌍 மாதம் 10ம் நாள் 24-ஜனவரி-26 சனிக்கிழமை ஷஷ்டி விரத நாளில்
சஷ்டி பாலன் சரவணபவன் செங்கதிர் வேலோன் நீலமயில் வாகனன் குமரனை
காசினியில் பிறந்த நம் பாச வினைகள் நீங்கி சரவணபவன் திருப்பாதங்களில்
முக்தி அடைந்திட வேண்டி போற்றி பாடி வணங்கிடுவோம் வாரீர்
தன்னிச்சை இல்லாது நிகழ்வனைத்தும் பார்த்து எனக்குறியதை தந்திட முன்னிற்கும் முருகா போற்றி
என்றைக்கும் காத்து நிற்கும் விரட்டி வரும் வினைகளையே கைவேல் தூளாக்கும் வடிவேலா போற்றி
இயக்கம் நிகழ்வதும் உந்தன் செயலே, செயலின் விளைவை உன்னிடமே கொடுத்தேன் தாளினை பணிந்தேன்
வருவாயே தருவாயே வள்ளலென வழங்கிட பெறுவேனே தடையின்றி அத்தனையும் உன்னருளே வேலா போற்றி
குழந்தையாய்ச் சிரித்து களிப்புற தோன்றி அருந்திடும் அமுதினை வார்த்து நீ நின்றாய் உன்னருளுக்கு எல்லையில்லையே முருகா சரணம்
பருகிடும் பாலனின் தாயவள் பரிவினைக் குழந்தை போல் வந்தே தாயுமாய் நின்றாய் இன்னருள் தரும் இறைவா சரணம்
அன்புடன் அழைத்ததும் அருகமர்ந்து கொண்டு
இன்புறும் மொழிகளை சொல்லி என்புடல் உருகிட எண்ணம் தந்தாய் முருகா சரணம்
அருளிடும் அன்பினில் எனை கரைய வைத்தாய், இருந்திடும் நாள்களில் உனையே என்றும் நினைத்திட செய்வாய் முருகா சரணம்
முக்கண் மூர்த்தி மகனே முருகக்கடவுளே, சக்தி பாலனே முத்துக்குமரனே, தகப்பன் சாமியே குருநாதா குஹா சரணம்
முருகா முருகா என்று உருகும் அடியேன் நெஞ்சம் கண்டு நீல மயிலேறி இருமாதர் புடைசூழ வருவாயே வடிவேலனே சரணம்
தெய்வானை நாயகா, வள்ளி மனமோஹனா,மாயவன் மருகா,மயில் வாஹனா, சரவணபவா,வரமருள, எனைஆளவா முருகா சரணம்
உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே, கண்கண்ட தெய்வமே, எந்தன் கலியுக வரதனே அருள் தாரும் முருகா
🙏🦚🐓


