ShareChat
click to see wallet page
search
ஒவ்வொரு ராசிக்காரர்களின் குணாதிசயங்களும் கணித்து கூறப்படுகின்றன. மேலும் ராசிகளின் குணங்கள் அவற்றின் உறுப்புக்களின் அடிப்படையிலும் மாறுபடும். உறுப்புகள் என்பவை நெருப்பு, நிலம், நீர், காற்று ஆகியவை. இதில் நெருப்பு ராசிகள் என்பவை மேஷம், சிம்மம், தனுசு ஆகும். நில ராசிகள் என்பவை ரிஷபம், கன்னி, மகரம் ஆகும். காற்று ராசிகள் என்பவை மிதுனம், துலாம், கும்பம் ஆகும். நீர் ராசிகள் என்பவை கடகம், விருச்சிகம், மீனம் ஆகும். இவற்றில் நெருப்பு ராசியைச் சேர்ந்தவர்கள் மிகவும் துணிச்சலானவர்கள், நில ராசிக்காரர்கள் நடைமுறைவாதிகள், காற்று ராசிக்காரர்கள் அறிவார்ந்தவர்கள் மற்றும் நீர் ராசிக்காரர்கள் அதிக உள்ளுணர்வு கொண்டவர்கள் மற்றும் உணர்ச்சிவசப்படுபவர்கள். இது தவிர ஒருவரது ராசியைக் கொண்டு, அந்நபரின் எதிர்காலம், பலம், பலவீனம் போன்ற பலவற்றையும் கணித்து கூறலாம். ஆனால் ஒவ்வொரு ராசிக்காரர்களும் வெளியில் காட்டாமல் மறைத்து வைத்திருக்கும் ரகசிய குணம் உள்ளது. அந்த குணத்தை தெரிந்து கொள்ள விரும்பினால், தொடர்ந்து படியுங்கள். மேஷம் மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். இந்த மேஷ ராசியைச் சேர்ந்தவர்கள், வெளியில் எப்போதும் துணிச்சலானவர்களாக வெளியே காணப்பட்டாலும், ஒரு விஷயத்தில் இறங்கும் முன் ஆழ்மனதில் சரியா, தவறா என்று சந்தேகம் கொள்ளும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். ரிஷபம் ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த ரிஷப ராசியைச் சேர்ந்தவர்கள் மிகவும் அமைதியானவர்களாக இருப்பார்கள். ஆனால் தன்னுடன் இருப்பவர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் காளையாக சீறி பாய்வார்கள். மிதுனம் மிதுன ராசியின் அதிபதி புதன். இந்த மிதுன ராசியைச் சேர்ந்தவர்கள் மற்றவர்களை எளிதில் புரிந்து கொள்வார்கள். ஆனால் தனது உணர்ச்சிகளை மற்றவர்களிடம் சரியாக வெளிப்படுத்த தெரியாது. கடகம் கடக ராசியின் அதிபதி சந்திரன். இந்த கடக ராசியைச் சேர்ந்தவர்கள் ஒருவரிடம் அளவுக்கு அதிகமான பாசத்தை காட்டினாலும், பிடிக்காவிட்டால் திரும்பிக் கூட பார்க்கமாட்டார்கள். சிம்மம் சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இந்த சிம்ம ராசிக்காரர்கள் சுய கௌரவம் அதிகம் கொண்டவர்கள். இவர்கள் மீது பாசம் காட்டினால், அவர்கள் பனிக்கட்டியாக உருகுவார்கள். அதுவே பகையை வெளிப்படுத்தினால், எரிமலை போன்று வெடிப்பார்கள். கன்னி கன்னி ராசியின் அதிபதி புதன். இந்த கன்னி ராசிக்காரர்கள் ஒருவர் தப்பு செய்தால், அதை முகத்திற்கு நேராக சொல்வார்கள். இவர்களுக்கு எதையும் ஒளித்து வைத்து பேசத் தெரியாது. பாசத்திற்கு அதிகம் ஏங்குவார்கள். துலாம் துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த துலாம் ராசியைச் சேர்ந்தவர்கள் யார் மனதையும் கஷ்டப்படுத்தக்கூடாது என்று நினைப்பார்கள். இவர்களுக்கு ஒருவரை பிடித்துவிட்டால், உயிரையும் கொடுப்பார்கள். இவர்களுக்கு பணத்தை சேமித்து வைக்கத் தெரியாது. விருச்சிகம் விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். இந்த விருச்சிக ராசியைச் சேர்ந்தவர்கள் மற்றவர்கள் செய்யும் தவறை எளிதில் கண்டுபிடிப்பார்கள். ஆனால் அதை எப்போதும் காட்டி கொடுக்கமாட்டார்கள். சரியான தருணத்தில் பூகம்பமாக வெடிப்பார்கள். தனுசு தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். இந்த தனுசு ராசியைச் சேர்ந்தவர்கள் இன்றைய சந்தோஷத்தை அனுபவிக்காமல், எதிர்காலத்திற்காக ஓடிக்கொண்டே இருப்பார்கள். இதனால் கிடைக்கும் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்காமல் கடினமாக உழைத்துக் கொண்டே இருப்பார்கள். மகரம் மகர ராசியின் அதிபதி சனி பகவான். இந்த மகர ராசிக்காரர்கள் மிகவும் அமைதியாக இருப்பார்கள். தன்னுடைய எதிர்கால வாழ்க்கை பற்றி எந்நேரமும் யோசித்துக் கொண்டே இருப்பார்கள். இதனால் அவ்வப்போது தனிமையில் இருப்பதாக உணர்வார்கள். கும்பம் கும்ப ராசியின் அதிபதி சனி பகவான். இந்த கும்ப ராசிக்காரர்கள் வெளிப்படையாக இருப்பது போன்று அனைவரிடமும் பேசி பழகினாலும், தன்னுள் ஏகப்பட்ட ரகசியத்தை வைத்துக் கொண்டு திரிவார்கள். மீனம் மீன ராசியின் அதிபதி குரு பகவான். இந்த மீன ராசியைச் சேர்ந்தவர்கள் குடும்பத்திற்காகவும், தன்னுடன் இருப்பவர்களுக்கவும் சுயநலமாக இருப்பார்கள். எதுவாக இருந்தாலும் துணிந்து இறங்கி செய்வார்கள். #🔮தை மாத ஜோதிடம்✨ #🥰பொங்கல் விரைவில்🎋 #🔯இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்🌠 #✡️தோஷ பரிகாரங்கள் #✨தினசரி ராசிபலன்✡️
🔮தை மாத ஜோதிடம்✨ - உங்க ராசியை சொல்லுங்க நீங்க அதிகம் வெளிப்படுத்தாத உங்க (60018608 உண்மையான சொல்றோம் உங்க ராசியை சொல்லுங்க நீங்க அதிகம் வெளிப்படுத்தாத உங்க (60018608 உண்மையான சொல்றோம் - ShareChat