ShareChat
click to see wallet page
search
மனைவியின் நடத்தையில் கணவருக்கு சந்தேகம் அதிகமாகி வந்த நிலையில் அன்றைய தினம் வசமாக சிக்கிவிட்டாராம்.. எப்படி தெரியுமா? சுருக்கமாக இங்கே பார்ப்போம். ஜான்சி நகரை சேர்ந்தவர்கள் அந்த இளம் தம்பதி.. கொஞ்ச நாளாகவே தன்னுடைய மனைவி மீது கணவனுக்கு சந்தேகம் நிலவி வந்தது... அதனால் மனைவியின் நடவடிக்கைகளை அவருக்கே தெரியாமல் ரகசியமாக கண்காணித்து வந்துள்ளார்.. கள்ளக்காதலன் மனைவி அதன்படி கடந்த 11ந்தேதி மனைவி, தன்னுடைய கள்ளக்காதலனுடன் ஓட்டலுக்கு போகிறார் என்ற செய்தி கணவருக்கு கிடைத்து.. உடனே அவர்கள் 2 பேரையும் பின்தொடர்ந்து சென்றார். அந்த கள்ளக்காதல் ஜோடி, ஒரு ஓட்டலில் நுழைந்தனர்.. 103ம் நம்பர் ரூமை புக் செய்துவிட்டு அதற்குள் நுழைந்தனர்.. இதற்கு மேல் பொறுமை இல்லாத கணவர் உடனடியாக போலீசாரின் 112 என்ற எமர்ஜென்சி நம்பருக்கு போன் செய்தார்.. சிறிது நேரத்தில் போலீசாரும் வந்தார்கள்.. அவர்களுடன் ஓட்டலின் 103-ம் எண் கொண்ட ரூமுக்கு சென்றார். ரூமின் கதவை போலீசார் தட்டியதுமே, மனைவிக்கும் கள்ளக்காதலனுக்கும் டென்ஷன் ஒட்டிக் கொண்டது. உடனே கள்ளக்காதலன் கட்டிலுக்கு அடியில் பதுங்கி கொண்டார். ஓட்டல் ரூம் போலீஸ் மனைவி அறைக்கதவை திறந்ததுமே எதிரே கணவரும், போலீசும் நிற்பதை பார்த்து வெலவெலத்து போய்விட்டார்.. அந்த ரூமிலேயே காரசார வாக்குவாதம் வெடித்தது... தான் மட்டுமே ரூமில் இருப்பதாகவும், எதற்காக தன்னை நோட்டமிட்டு வரவேண்டும் என்று கணவரிடம் தகராறு செய்தார் மனைவி.. இதை கேட்டு கணவருக்கு கோபம் அதிகமாகி வாக்குவாதம் செய்தார்.. இந்த தம்பதி போட்ட சண்டையில், ஓட்டல் ஊழியர்கள், பக்கத்து ரூம்களில் தங்கியவர்கள் என எல்லாரும் திரண்டு வந்துவிட்டனர்.. அதற்கு மேல் சமாளிக்க முடியாத மனைவி, கட்டிலுக்கு அடியில் இருந்த கள்ளக்காதலனை இழுத்து, வெளியே வர செய்தார்... இதனை பார்த்து வெளியே நின்றவர்கள் அதிர்ந்து விட்டனர். கட்டிலுக்கு அடியில் போன உருவம் பிறகு அந்த பெண் போலீசாரிடம், எங்களுக்குள் ஒட்டுஉறவு எதுவும் இல்லை.. உறவு முறிந்தது முறிந்ததுதான்.. என் விருப்பத்தின்பேரில்தான் என் காதலனை அழைத்து வந்தேன் என்றார்.. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணையை நடத்தியபோதுதான் குடும்ப சிக்கல்கள் வெளிவந்தன.. அதாவது இந்த தம்பதிக்கு 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.. சில மாதங்களிலேயே தம்பதி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, கோர்ட்டு வரை சென்றுள்ளார்கள்.. கோர்ட் அறிவுரைப்படி, இருவரும் மனைவியின் மாமா வீட்டில் தங்கியுள்ளனர். ஆனால் அதுவும் நீடிக்கவில்லை. அப்போது முதல் 2 பேருமே ஒன்றரை ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்களாம்.. இந்த நேரத்தில்தான் மனைவிக்கு மற்றொரு நபருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.. கணவருக்கு விவாகரத்து தர விருப்பமில்லை என்றாலும், விவாகரத்துக்கு சம்மதிக்க ரூ.10 லட்சம் பணம் தர வேண்டும் என மனைவி மிரட்டுகிறாராம்.. ஆடிப்போன போலீஸ் இவ்வளவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.. இப்போது இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நவபாத் காவல் நிலைய அதிகாரி ரவி ஸ்ரீவஸ்தவா உறுதி தந்துள்ளார்.. இன்னமும் விவாகரத்து கிடைக்காத நிலையில், விவாகரத்து தர கணவருக்கு விருப்பமும் இல்லாத நிலையில், மனைவி செய்துள்ள இந்த காரியம் பெரும் பரபரப்பையும், கடும் விமர்சனங்களையும் ஏற்படுத்தி உள்ளது. #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #📢 ஜனவரி 19 முக்கிய தகவல்கள் 📸
காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 - 14 கட்டிலுக்கு அடியில் போன உருவம்  ஓட்டல் ரூமில் மனைவி ஆடிய ஆட்டம்  திகைத்த போலீஸும் பரிதாப கணவரும் 14 கட்டிலுக்கு அடியில் போன உருவம்  ஓட்டல் ரூமில் மனைவி ஆடிய ஆட்டம்  திகைத்த போலீஸும் பரிதாப கணவரும் - ShareChat