#innraya SINTHANAY சிந்தனை"*.( 14.01.2026 )
...................................
*"பழையன கழிதலும், புதியன புகுதலும்.*
................................
பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான இன்று பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையை தமிழர்கள் நீண்ட காலமாக கொண்டாடி வந்து இருக்கிறார்கள்..
மார்கழி மாதத்தின் இறுதிநாளில் பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் போகிப் பண்டிகை கொண்டாடப் படுகிறது.
''பழையன கழிதலும், புதியன புகுதலும்'' என்ற அடிப்படையில் நம் முன்னோர்கள், இந்த போகி பண்டிகையினை கொண்டாடி வந்து உள்ளனர்.
இந்த நாளில், பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை எரித்து மக்கள் போகியை கொண்டாடுவது வழக்கமாக உள்ளது.
"பழையன கழிதலும் புதியன புகுதலும்' இயற்கையின் நியதி. இருப்பினும் பலருக்கு இதனை ஒத்துக்கொள்ள மனப்பக்குவம் ஏற்படுவதில்லை.
மாற்றங்கள் தவிர்க்க முடியாதவையென்பதைத் தெரிந்து இருந்தாலும் அவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்து விடுவார்கள்.
நீண்ட காலமாக பழக்கத்தில் இருந்தவைகள் இதற்கு மேலும் உபயோகிக்கத் தக்கவை அல்ல என்று யானபின் அவைகளை நீக்குதலும், அதன் இடத்தில் புதிய பொருள்களை கொணர்வதும் அவசியம் ஆகிறது.
எனவே, புதிதாய் பிறக்கும் வருடத்தில் ஒருமுறை உபயோகத்தில் இல்லாதவற்றை கழித்து, வீட்டினையும் ஒரு முறை சீர்திருத்தம் செய்து, புதிய பொருள்களை அங்கு அழகுடன் இருத்தி, இன்புறுவது தொன்று தொட்டு தமிழர்களிடம் இருந்து வந்த மரபாகும்.
இதைத்தான் ''பழையன கழிதலும் புதியன புகுதலும்'' என்று கூறினர். தேவையில்லாமல் போக்கிய பொருள்களின் இடத்தில் புதியன கொணர்ந்து நிறைத்தனர்.
பழையனவற்றைப் போக்கக் கூடிய இந்த பண்டிகைக்கு போக்கி என்ற பெயர் இருந்தது, அது காலப் போக்கில் மருவி போகி என மாறியுள்ளது.
அந்த கால வழக்கப்படி கடந்த ஆண்டிற்கு நன்றியை தெரிவிக்கும் விதமாகவும், புது ஆண்டை வரவேற்கும் விதமாகவும் போகி பண்டிகை கொண்டாடப் பட்டது.
பழைய பொருட்களைக் கழைந்து வெளி ஏற்றி, அவற்றை எரித்த செயல்களால் ஒப்பற்ற சிந்தனையை தமிழர் உலக்கு தந்தனர்.
*ஆம்.,நண்பர்களே..*
உண்மையில், போகி பண்டிகை என்பது,நம்முடைய மனதில் படிந்து விட்ட அனைத்து கவலைகளையும், வெறுப்பு, கோபம், பொறாமை என தீய எண்ணங்களை அனைத்தையும் மனம் என்னும் வீட்டில் இருந்து வெளியில் தூக்கிப் போட்டு எரித்து விட்டு,
தை முதல் நாள் அதாவது தமிழ்ப் புத்தாண்டு முதல் புது மனிதனாக நல்லவற்றை மட்டுமே செய்யும் புது மனிதனாக மாற இந்த போகி பண்டிகையில் உறுதி எடுத்துக் கொள்வோம்.
போகி நாளில் நம் முன்னோர்களை வணங்கிவாழ்வில் வளம் பெறுவோம்.(ஆக்கம்.உடுமலை சு.தண்டபாணி..........)💐💐🙏🏻🌹🌹


