#🙏கோவில் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #சிறுவாச்சூர் மதுர காளியம்மன் #🙏 வியாழன் பக்தி ஸ்பெஷல் #🙏வியாழன் பக்தி ஸ்பெஷல்🌟 🙏சிறுவாச்சூர்
🌺 இத்தலத்தில் மிகப் புகழ்பெற்ற நேர்த்திக்கடன் என்றால் அது மாவிளக்கு நேர்த்திக்கடன் என்பதாகும். வெளியில் எங்கும் மாவிளக்கு மாவு தயாரிக்காமல் ஆலய வளாகத்திற்குள் அரிசி கொண்டுவந்து ஊற வைத்து இடித்து இங்கேயே மாவிளக்கு மாவு தயார் செய்கிறார்கள்.
🌺 பின்பு அதனுடன் நெய்விளக்கு ஏற்றித் தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். இதற்காக மாவு இடிக்கத் தனியிடம் ஒதுக்கப்பட்டு உரல்களும், உலக்கைகளும் ஆலயம் மூலமாகவே வைக்கப்பட்டுள்ளன.
🌺 இடிக்க முடியாத பக்தர்களுக்கு கூலிக்கு மாவிடித்துத்தர பணியாளர்களும் உள்ளனர்.
மதுரைக் காளியம்மன் என்ற திருப்பெயரே பின்னாட்களில் மருவி மதுரகாளியம்மனாக வந்ததாகக் கூறுகிறார்கள்.
🌺 அம்மன் சுமார் 4 அடி உயரமாக இருக்கிறார். வடக்கு நோக்கிய சன்னதியில் அம்மன் வடக்கு நோக்கி அமர்ந்துள்ளாள்.
🌺 நான்கு திருக்கரங்கள் இவற்றில் உடுக்கை, பாசம், சூலம், அட் சய பாத்திரம் ஆகியவற்றை ஏந்தியுள்ளாள். இடது திருவடியை மடித்த நிலையில் வைத்து வலது திருவடியை சிம்மத்தின் மீது ஊன்றி அமர்ந்த திருக்கோலம்.
🌺 திருவடியில் அரக்கன் இல்லாததால் அழிக்கும் தொழிலில் காட்சியில்லை. அருளும் நிலையிலேயே காட்சி.
🌺 திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து 50கி.மீ தொலைவில் சிறுவாச்சூர் உள்ளது.
~மகிழா. 💃
-பகிர்வு பதிவு.
🌹🌹🌹🌹🌹🌹
அசல் பதிவருக்கு நன்றி 🌹


