அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"என் சமுதாயத்தாரில் பாவம் செய்த அனைவரும் இறைவனால் மன்னிக்கப்படுவர்;
தம் பாவங்களைத் தாமே பகிரங்கப்படுத்துகிறவர்களைத் தவிர."
ஒருவர் இரவில் ஒரு பாவச் செயல் புரிந்துவிட்டுப் பிறகு காலையானதும் அல்லாஹ் அவனுடைய பாவத்தை பிறருக்குத் தெரியாமல் மறைத்துவிட்டிருக்க, ‘இன்னாரே! நேற்றிரவு நான் பாவங்களில் இன்னின்னதைச் செய்தேன்’ என்று அவனே கூறுவது பகிரங்கப்படுத்துவதில் அடங்கும். அவன் செய்த பாவத்தை இரவில் பிறருக்குத் தெரியாமல் இறைவன் மறைத்துவிட்டான். ஆனால், இறைவன் மறைத்ததைக் காலையில் அந்த மனிதன் தானே வெளிச்சமாக்கி விடுகிறான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(புகாரி: 6069) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️


