ShareChat
click to see wallet page
search
#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள் டிசம்பர் 15, 1891* ஜேம்ஸ் நெய்ஸ்மித், கூடைப்பந்தாட்டத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்திய நாள். டாக்டர் ஜேம்ஸ் நெய்ஸ்மித் (Dr. James Naismith) கனடிய விளையாட்டு கல்வி ஆசிரியரும், கூடைப்பந்து கண்டுபிடிப்பாளரும், அமெரிக்க காற்பந்தாட்டத்தில் தலைக்கவசத்தை கண்டுபிடித்தவரும் ஆவார். 1891ல் இவர் முதல் 13 கூடைப்பந்து சட்டங்களை கூறியுள்ளார். இச்சட்டங்களில் 12 இன்று வரை ஏதாவது ஒரு விதத்தில் பயன்படுகின்றன. மாசசூசெட்ஸில் விளையாட்டு கல்வி ஆசிரியராக இருக்கும்பொழுது கூடைப்பந்து விளையாட்டைக் கண்டுபிடித்தார். 13 ஆண்டுகளுக்குப் பின்னர் 1904 ஒலிம்பிக் போட்டிகளில் சோதனை போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டு 1936 ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக கூடைப்பந்து விளையாட்டு இருந்தது. 1898ல் நெய்ஸ்மித் கேன்சஸ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியரும் முதலாம் கூடைப்பந்து பயிற்றுனராகவும் ஆனார்.
வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள் - ShareChat