அடேய்....இந்தியாவிலேயே முதல்வர் ஆவதற்கும், அமைச்சர் ஆவதற்கும் முழு தகுதி வாய்ந்த தலைவர்களில் முதல் இடத்தில் இருப்பது எங்கள் முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் தான்.
எந்த சனாதனத்தை எதிர்த்து பேசியதற்காக உதயநிதியை விமர்சிக்கிறாயோ, அந்த சனாதனம் என்ன கூறுகிறது என்பது உனக்கு தெரியாதா...?
(மனுஸ்மிருதி - அத்தியாயம் 5, சுலோகம் 147, 148, 149)
'பெண்களுக்கு சொத்துரிமை வழங்க கூடாது, கல்வி வழங்க கூடாது, இந்த இரண்டிற்கும் பெண்கள் ஆண்களையே நம்பி வாழ வேண்டும்.
ஆண்களில் சூத்திரனுக்கு கல்வி வழங்க கூடாது, சூத்திரனுக்கு சொத்துரிமை வழங்க கூடாது' என்கிறது நீ சொல்லும் சனாதனம்.
சூத்திரன் என்பவர்கள் யார்?
இந்துக்களில் 95% பேர்.
பெண்கள் என்பவர் யார்?
இந்துக்களில் 50% பேர்.
ஆக, இந்துக்களில் 95% மக்களை பிறப்பால் இழிவுபடுத்தி, தாழ்வுபடுத்தி, உரிமைகளை பறித்து ஆதிக்கம் செலுத்தும் சனாதனத்தை நாங்கள் ஏன் பின்பற்ற வேண்டும்..?
உங்கள் சனாதனத்திற்கு எதிராக இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணிற்கும் சொத்துரிமை கிடைக்க காரணமாக இருந்தவர் எங்கள் கலைஞர்.
அதே போல், உங்கள் சனாதனத்திற்கு எதிராக பெண்களுக்கு கல்வி வழங்குவதை தான் முக்கியப் பணியாக கொண்டு எங்கள் திராவிட மாடல் அரசு செயல்படுகிறது. அப்போ, உங்களுக்கு எங்கள் முதல்வர் மீதும், துணை முதல்வர் மீதும் வன்மம் இருக்க தானே செய்யும்...?
பியூஸ் கோயல் அவர்களே....நீங்கள் அனைவரும் உண்மையில் சனாதனத்தை பின்பற்றுகிறீர்கள் என்றால்....'பெண்களுக்கு சொத்துரிமை கிடையாது, பெண்களுக்கு கல்வி கிடையாது' என்கிற ஒரு சட்ட மசோதாவை பாராளுமன்றத்தில் கொண்டு வர உங்கள் பிரதமருக்கு தெம்பு, திராணி, தைரியம் இருக்கிறதா...?
சட்டம் கூட வேண்டாம்....ஒரு பொது மேடையில் உங்கள் சனாதனம் கூறும் 'பெண்களுக்கு சொத்துரிமை கிடையாது, பெண்களுக்கு கல்வி கிடையாது' என்கிற கொள்கைகளை பேச உங்களுக்கு துணிச்சல் இருக்கிறதா...?
இவ்வாறு உங்களால் பேச முடியவில்லை எனில், நீங்கள் ஒரு போலி சனாதனவாதி.
நீங்கள் அனைவருமே போலிகளாக இருந்துக் கொண்டு சமூக விரோத கொள்கைகளை கொண்ட சனாதனத்தை எதிர்க்கும் உதயநிதியை எப்படி விமர்சிக்க முடியும்..?
Prakasam P Palani #👨மோடி அரசாங்கம்


