#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை
*"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"*
தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏
பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய
திருமந்திரம் - *ஏழாம் தந்திரம் - 24. மன ஆதித்தன்*
இறைவனின் திருநாமம் - சிவபெருமான்
இறைவி - உமையம்மை
அமைவிடம் : பொது
பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் :
திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் என்று போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது.
திருமந்திரத்தின் ஏழாம் தந்திரம், திருமூலரால் அருளப்பட்ட பத்தாம் திருமுறையின் ஒரு பகுதியாகும். இது ஆன்மிகப் பாதையில் உயர்ந்து, சகஸ்ரார தாமரையை அடைந்து, சிவனுடன் ஐக்கியமாகும் "தாங்கும் மந்திரம்" பற்றிய ஆழமான ஞானம், யோகப் பயிற்சிகள், பஞ்சாக்ஷர மந்திரத்தின் நுட்பங்கள், மற்றும் பிரம்மன், திருமால் போன்ற ஐம்பெருந்தேவர்களின் தத்துவ விளக்கங்களை உள்ளடக்கியது. இது யோகத்தின் உச்ச நிலையையும், சிவபெருமானின் அருளையும் விளக்கும் மிக உயர்ந்த தத்துவ நூலாகும்
*"மன ஆதித்தன்" என்பது, மன மண்டலத்தில் சூரியன் போல பிரகாசிக்கும் சிவனைப் பற்றியது; இந்தத் தந்திரப் பாடல்கள், கடுமையான கதிர்களை வீசும் சூரியனும் சந்திரனும் எதிர் நின்று ஆற்றலை வெளிப்படுத்தும்போது, அதன் உள்ளே ஆத்மா எவ்வாறு இயங்குகிறது, மேலும் பிரபஞ்சத்தில் சிவனது பரந்த ஆற்றலை விளக்கும் ஆழ்ந்த ஆன்மிகப் பொருளைக் கொண்டுள்ளது*.
பாடல் வரிகள் :
*24. மன ஆதித்தன்*
1988 எறிகதிர் ஞாயிறு மின்பனி சோரும்
எறிகதிர் சோமன் எதிர்நின்று எறிப்ப
விரிகதிர் உள்ளே இயங்கும் என் ஆவி
ஒருகதிர் ஆகில் உலாஅது ஆமே. 1
1989 சந்திரன் சூரியன் தான்வரின் பூசனை
முந்திய பானுவில் இந்துவந்து ஏய்முறை
அந்த இரண்டும் உபய நிலத்தில்
சிந்தை தெளிந்தார் சிவமாயி னரே. 2
1990 ஆகும் கலையோடு அருக்கன் அனல்மதி
ஆகும் கலையிடை நான்குஎன லாம்என்பர்
ஆகும் அருக்கன் அனல்மதி யோடுஒன்ற
ஆகும்அப் பூரணை யாம்என்று அறியுமே. 3
1991 ஈர் அண்டத்து அப்பால் இயங்கிய அவ்வொளி
ஓர் அண்டத் தார்க்கும் உணரா உணர்வது
பேர்அண்டத்து ஊடே பிறங்கொளி யாய்நின்று
ஆர் அண்டத் தக்கார் அறியத்தக் காரே. 4
1992 ஒன்பதின் மேவி உலகம் வலம்வரும்
ஒன்பதும் ஈசன் இயல்அறி வார்இல்லை
முன்புஅதின் மேவி முதல்வன் அருளிலார்
இன்பம் இலார்இருள் சூழநின் றாரே. 5
திருச்சிற்றம்பலம் 🕉️🙏
திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏
ஓம் நமசிவாயம் 🕉️🙏
சிவாய நம ஓம் 🕉️🙏
நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
01:10

