ShareChat
click to see wallet page
search
#🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஐந்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 15.01.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======= இப்படியே வைத்த இவன்வேத மானதுக்குள் அப்படியே மற்றோரை அகப்படுத்த வேணுமென்று பணமா னதைக்கொடுத்துப் பகட்டினான் மானிடரைச் சிணமாக மானிடவர் சேர்ந்தா ரவன்வேதமதில் இப்படியே வேதமொன்று இவன்பலத்தா லுண்டாக்கி அப்படியே தானிருக்க அவனேது தானினைப்பான் ஆணுவங்கள் சேனை ஆயுதங் கள்வெகுவாய் வாணுவங்கள் ரெம்ப வம்மிசத்தோ ரெம்பரெம்ப படையாலு மற்றொருவர் பணத்தாலும் நம்மையுந்தான் தடைசெய்து நம்மைத் தடுப்பவரா ரென்றுசொல்லி ஆரா ரெதிரியென்று அவன்பார்த் திருக்கையிலே பூராய மாயொருவன் போதித்தா னவன்றனக்குச் சோழனென்றும் சேரனென்றும் துய்யபாண் டியனென்றும் வேழமுடி மன்னர் விபரீதமா யாண்டிருந்த தேச மைம்பத்தாறு உண்டுகாண் செந்துரையே வாசமுட னாண்டு வகையா யிருக்கையிலே வேசையொரு தாசி வழிநுதலாள் தன்வயிற்றில் பேசரிய வோர்மதலை பிறந்ததுகாண் மாயமுடன் மதலை பிறந்து வையகத்தி லேயிருந்து குதலை வளர்ந்து குடுமி வளர்க்கையிலே சேரனுக்குஞ் சோழனுக்கும் சிறந்தபாண் டியனுக்கும் வாரமுள்ள தெய்வ மாதருட சாபமதால் அவர்கள் கிளையிறந்து ஆணுவங்கள் தானழிந்து இவர்களும் போய்க்கடலில் இருந்தார்கள் கல்லெனவே ஆனதினால் முன்னம் அவனிதனை யாளுதற்கு மானமுள்ள பேர்கள் மறுத்தேதா னில்லாமல் மாயமுடன் தாசி மகன்தானும் சீமைதன்னை ஞாயமில்லா வண்ணம் நாடாண் டிருந்தனனே சென்றால்தா னந்தச் சீமைநமக் காகுமென்று அன்றேதான் சொல்ல அவன்கோபத் தால்வெகுண்டு வந்தானே யந்த மாநீசன் தன்பேரில் . விளக்கம் ========== இப்படி அந்த வெண்ணீசன் ஏற்படுத்திய வேதங்களை எல்லாம் மக்கள் மறுப்பு தெரிவிக்காமல் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகப் பணத்தையும், ஏனைய பொருட்களையும் கொடுத்துப் பெருமளவு மக்களைத் தன் வயமாக்கிக் கொண்டான். மக்களும் மிகவும் எளிதாக அவனுடைய செயல்பாடுகளுக்கு உடன்பட்டனர். இவ்வணமாக வெண்ணீசனுடைய சக்தியினாலும், யுக்தியினாலும் வேதம் ஒன்றை உருவாக்கிவிட்டான். இந்நிலையில் அந்த வெண்ணீசனுக்குப் படைகளும், ஆயுதங்களும் ஏனய செல்வங்களும் பெருகின. வகை தொகையில்லாத அளவில் வம்சா விருத்தியும் பெற்றிருந்தான். எனவே தம்முடைய திட்டங்களை எதிர்ப்பதற்கோ, தடை செய்வதற்கோ, எவர் ஒருவராலும் முடியாது. அதற்கான படை பலமும், பணபலமும் எவரிடமும் இல்லை என்ற ஆணவம் அவனிடம் குடி கொண்டது. . இப்படித் தனக்கு நிகர் யாருமில்லை என்ற மமதையில் அவன் இருக்கும்போது, பாரதபூமியின் தென்புலத்தின் பூர்வீகத்தை பற்றி ஆராய்ந்து அறிந்த, விசித்திரமான விருப்பமுடைய ஒரு விஷமி அந்த வெண்ணீசனை அணுகிச் சொல்கிறான். செந்துரையே, பாரத நாட்டின் தென்புலத்தில் சோழன், சேரன், பாண்டியன் என்ற மூவேந்தர்கள் வலிமை வாய்ந்த முடி மன்னர்களாக ஐம்பத்தாறு தேசங்களும் வியக்கத்தக்க நிலையில் ஆட்சிபுரிந்து வந்தனர். . அப்பொழுது, தாசி குலத்தில் பிறந்த அடியவள் ஒருத்தி பிறை போன்ற கண்களுடன் மிக அழகாக இருந்தாள். அவளுடைய வயிற்றில் சொற்களால் விளக்க முடியாத வகையில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவன் பிறந்ததே மாயச் செயலாகத் தான் இருக்க முடியும். . அவன் பிறந்து வளர்ந்து குடுமி வளர்ந்து வாலிப பருவமாய் இருந்து கொண்டிருக்கும் பொது, அன்றொரு காலத்தில் காளி இட்ட சாபத்தின்படி இம்மூன்று நாட்டையும் ஆள்வதற்கு ஒரே சமயத்தில் முறைப்படியான வாரிசு இல்லாமல் ஆகி விட்டது. எனவே, அந்த மூன்று நாட்டையும் அந்தத் தாசி பெற்ற மகன் கைப்பற்றிற ஆண்டு கொண்டிருக்கிறான். . அதைப்பற்றி கேட்க, மானமும் வீரமும் உள்ள மனிதர்கள் யாரும் முன்வரவில்லை. இப்படி எதிர்ப்பே இல்லாத காரணத்தால் தன்னுடைய மாய சக்தியினால் அந்த தாசியின் மகன் மூவேந்தர்களின் நாட்டையும் சேர்த்து நியாயமில்லாமல் ஆண்டு கொண்டிருக்கிறான். எனவே, இத்தருணத்தில் நாம் அங்குப் படையெடுத்துச் சென்றால் அந்த மூன்று நாட்டையும் நமது வசமாக்கிவிடலாம் என்று ஆலோசனை கூறினான். இதைக்கேட்ட வெண்ணீசன் வெகுண்டெழுந்து, படைதிரட்டிப் பயணித்தான். . . அகிலம் ======== வெண்நீசன் படையெடுத்து வந்து தோல்வியுறல் ==================================================== செந்தார மாயன் சேனை வருவதையும் அறிந்தே நீசன்தனக்கு அச்சுதருஞ் சொல்லலுற்றார் வெறிந்தமுள்ள நீசன் வேண்டும் படைகூட்டி நசுறாணி யான நல்லவெண் ணீசனுக்குத் துசுவான மாநீசன் திருமாலின் தன்னருளால் எற்றுக் கொடாமல் இவன்வெற்றி கொண்டனனே மற்றுமந்த நீசன் மாறியவன் போயிருந்தான் அப்போது அந்த அன்னீத மாநீசன் இப்போது படையை யாம்வெற்றி கொண்டோமென்று கோட்டைபின்னு மிட்டுக் கொடிய விருதுகட்டித் தாட்டிமையா யுலகில் சட்டமது வைத்தனனே . விளக்கம் ========== வெள்ளை நீசன் படையெடுத்து வருகிறான் என்பதை உணர்ந்த மகாவிஷ்ணு அச்செய்தியை கலி நீசனுக்கு அறிவித்தார். அததால் தன்னைச் சுதாரித்துக்கொண்ட கலிநீசன், மிக ஆவேசமாகத் தன் படைகளையெல்லாம் திரட்டி, நசுறாணி எனப்படும் வெள்ளை நீசனின் படைகளை எப்படி வெற்றி கொண்டான் என்பதை யாரும் குறிப்பிட்டுச் சொல்லமுடியாத அளவில் போர் புரிந்து, மகாவிஷ்ணுவின் அருளால் வெற்றி வாகை சூடினான். . இந்த வெற்றியே அந்தக் கலிநீசனை இன்னும் கொடியவனாக்கி. இப்பொழுது எதிரியின் படையை நாம் வெற்றி கொண்டுவிட்டோம் என்ற ஆணவத்தோடு, இன்னும் பல கோட்டை மதில்களைக் கட்டி அந்தக் கோட்டையில் தாம் வெற்றி பெற்றதற்கான அடையாளக் கொடியைப் பறக்கவிட்டதோடு, அகந்தையின் உச்சக் கட்டமாக அநியாயமான பல சட்டங்களை நாட்டு மக்கள் மீது திணித்து வைத்தான். . . தொடரும்... அய்யா உண்டு.
🚩அய்யா வைகுண்டர் 🚩 - ShareChat