பேருந்தின் சேவையை துவக்க கோரிக்கை
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட கடையல் பேரூராட்சியில் அதிகப்படியான மக்கள் வசித்து வருகின்றனர்.
அவர்களுக்கு நாகர்கோவில் பகுதிக்கு செல்ல பஸ் வசதி கிடையாது.
கடந்த 3 வருடங்களுக்கு முன்பு 313 E என்ற பேருந்து நாகர்கோவில் முதல் கோதையார் வழித்தடத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. தற்போது முன்று வருடமாக அந்த பேருந்து இயக்கப்படவில்லை. மேலும் விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட மருதங்கோடு மற்றும் இடைக்கோடு பகுதியில் தற்போது இயங்கி வரும் மார்த்தாண்டம் பணிமனை பேருந்துகள் 85 B களிக்காவிளை, இளஞ்சிறை, மும்பள்ளி கோணம், சூரங்குடி, மாங்காலை, பனிச்ச மூடு மற்றும் 83E எண் கொண்ட மேல்புறம், செம்மங்காலை, மருதங்கோடு, பனங்காலை, களியக்காவிளை, ஆகிய இரு பேருந்துகளும் தற்போது ஒரு வழித்தடத்தில் மட்டுமே இயங்கி வருகிறது.
இதனை இரு வழித்தடத்திலும் இயக்க வேண்டும் என்று மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் திரு. சிவசங்கர் அவர்களை இன்று(ஜன.21) நேரில் சந்தித்து எம்.எல்.ஏ தாரகை கோரிக்கை மனு அளித்தார். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்


