*#நாளை_தை_அமாவாசையில் #பித்ரு_லோகம்_செல்லும்_முன்னோர்கள், #இந்த_முறையில்_தானம்_கொடுங்கள்_தடைகள்_நீங்கும்.*
🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑
நம்முடைய வீட்டிற்கு வந்து தங்கி விட்டு செல்லும் விருந்தினர்களை வழியனுப்பி வைப்பது போல தை அமாவாசையில் பித்ரு லோகம் செல்லும் முன்னோர்களை நாம் மகிழ்ச்சியுடன் தர்ப்பணம் கொடுத்து வழியனுப்பி வைக்க வேண்டும். தை அமாவாசை நாம் கொடுக்கும் தானங்களின் மூலம் தடைகள் நீங்கி சுப காரியங்கள் நடைபெறும்.
🌑
*#முன்னோர்கள்_வருகை:*
பித்ரு லோகத்தில் உள்ள நமது முன்னோர்கள் தட்சிணாயான புண்ணிய காலமான ஆடி அமாவாசை நாளில் பூலோகத்திற்கு வந்து புரட்டாசி மாதத்தில் மகாளாய பட்ச காலத்தில் நம்முடனேயே தங்கி இருந்து உத்தராயாண புண்ணிய காலமான தை மாத அமாவாசை நாளில் நம்மை ஆசிர்வதித்து மீண்டும் பிதுர் லோகத்திற்கு திரும்பி செல்வதாக ஐதீகம். நம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதன் மூலம் என்னென்ன நன்மைகள் நடைபெறும் என்று பார்க்கலாம்.
🌑
*#தர்ப்பணம்:*
தை அமாவாசை நாளில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் புனித நீர் நிலைகளில் நீராடி இறந்த நம்முடைய முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் அளித்து வழிபடுவது மரபு. தை அமாவாசை இந்த ஆண்டு வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு ராமேஸ்வரம், கன்னியாகுமரி,கோடியக்கரை உள்ளிட்ட புனித தலங்களில் ஏராளமானோர் பித்ரு தர்பணம் அளிக்க தயாராகி வருகின்றனர்.
🌑
*#எள்ளும்_தண்ணீரும்:*
நம்முடன் வாழும் நம் பெற்றோர்களுக்கு குழந்தைகளுக்கு ஆற்றவேண்டிய கடமைகள் இருப்பதுபோல, இறந்தவர்களுக்கும் நாம் ஆற்றவேண்டிய கடமைகள் உள்ளன. இறந்தபின் ஒரு குறிப்பிட்ட காலம்வரை நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது அவசியம். அவரவர்கள் தங்களின் குடும்ப வழக்கப்படி வீட்டிலோ அல்லது நதிக்கரைகளுக்கோ சமுத்திரக் கரைகளுக்கோ சென்று முன்னோருக்குச் செய்யவேண்டிய வழிபாட்டினை மேற்கொள்ளலாம். குறைந்தபட்சம் எள்ளும் தண்ணீரும் விட வேண்டும் அவசியம்.
🌑
*#பித்ரு_தோஷம்:*
அமாவாசை நாளில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் புனித நீர் நிலைகளில் நீராடி இறந்த நம்முடைய முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் அளித்து வழிபடுபடுவது மரபு. ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்கள் இராமேஸ்வரம், திருப்புல்லானி மற்றும் கயா அக்ஷயவடம் போன்ற இடங்களில் தில ஹோமம் செய்வது தர்ப்பணம் செய்வது பித்ரு தோஷத்தை போக்கும் என்கிறது சாஸ்திரம்.
🌑
*#அன்னதானம்:*
தை அமாவாசை நாளில் கடற்கரையிலும் நதிக்கரைகளிலும் ஆற்றங்கரைகளிலும் முன்னோருக்கு தர்ப்பணம் செய்வார்கள். வீட்டில் இருந்தும் வழிபட்டு தர்ப்பணம் செய்யலாம். அமாவாசை நாளில் நமது முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்யலாம். இதன் மூலம் நமது கடன் பிரச்சினை நீங்கும் வறுமை நிலை மாறும். ஆடை தானம் கொடுத்தால் ஆரோக்கியம் அதிகரிக்கும் நோய் பிரச்சனை நீங்கும். ஆயுள் அதிகரிக்கும்.
🌑
*#நோய்_தீர்க்கும்_தானம்:*
குழந்தை பாக்கியம் ஏற்படுவதில் தடை இருப்பவர்கள் அமாவாசை தினத்தில் தேன் வாங்கி தானம் கொடுக்கலாம். இதன் மூலம் புத்திர பாக்கியம் உண்டாகும். கண் பிரச்சினை உள்ளவர்கள் தீபம், விளக்கு தானமாக கொடுக்கலாம். பார்வை கோளாறுகள் நீங்கும். கண் பிரச்சினைகள் நீங்கும். நெய் தானம் கொடுக்க தீராத நோய்கள் தீரும். பால், தயிர் தானமாக கொடுக்கலாம் கணவன் மனைவி பிரச்சினை தீரும் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்.
தோஷங்கள் நீங்கும். துன்பங்கள் துயரங்கள் நீங்க வெள்ளி தானமாக கொடுக்கலாம். காரிய வெற்றிக்கு தேங்காய் தானமாக கொடுக்கலாம். மனக்குழப்பங்கள் நீங்க பழங்களை தானமாக வழங்கலாம். இந்த தினத்தில் முன்னோர்களை வணங்கி தர்ப்பணம் கொடுப்பதுடன் நம்முடைய பிரச்சினைகள் நீங்க தானம் கொடுக்கலாம். முன்னோர்களின் ஆசியுடன் சகல செல்வ வளமும் பெருகும்.
🌑
*#தடைகள்_நீங்கும்:*
ஆடி அமாவாசை நாளில் பித்ரு லோகத்தில் இருந்து கிளம்பி வந்து கடந்த 6 மாத காலம் நம்முடன் தங்கியிருந்து ஆசி அளித்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து அவர்களை மகிழ்ச்சியுடன் பித்ரு லோகத்திற்கு வழியனுப்பி வைப்பதன் மூலம் தடைகள் நீங்கி நன்மைகளும் சுப காரியங்களும் நடைபெறும். #🌑அமாவாசை #🤔 ஆன்மீக சிந்தனைகள் #📸பக்தி படம் #🙏🏼ஓம் நமசிவாய #✨கடவுள்


