ShareChat
click to see wallet page
search
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோன்பு பாவங்களிலிருந்து காக்கின்ற கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் ‘நான் நோன்பாளி!’ என்று இருமுறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அந்த இறைவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும்! மேலும் ‘எனக்காக நோன்பாளி தம் உணவையும், பானத்தையும், இச்சையையும்விட்டு விடுகிறார்! நோன்பு எனக்கு மட்டுமே உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்!’ (என்று அல்லாஹ் கூறினான்). அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (புகாரி: 1894) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ஒரு சிறப்புமிக்க மாதத்திற்காக காத்திருக்கிறேன் புனித ரமலான் மாதம் ஒரு சிறப்புமிக்க மாதத்திற்காக காத்திருக்கிறேன் புனித ரமலான் மாதம் - ShareChat