ShareChat
click to see wallet page
search
#innraya SINTHANAY உதட்டளவில் பேசுகிறார்கள். மனமறிந்து பொய் சொல்கிறார்கள் . ஒரு கணத்தில் சொன்னதை அடுத்த கணத்தில் மறந்து விடுகிறார்கள். எதிரில் இருப்பவன் பிரக்ஞையின்றி தங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள். வயிறு காலியானாலும் வீடு நிறைய சாமான்களை வாங்கி வைக்கிறார்கள். உடமை கருதி செத்துக் கொண்டிருக்கும் ஒருவன் முன், "இவன் ஏன் இன்னும் சாகமாட்டேன்" என்கிறான் என்று பொறுமை இழந்து நிற்கிறார்கள். எல்லாவற்றிலும் அதிசயம் என்னவென்றால் இவர்கள் தங்களைப் போல் நல்லவர்கள் இல்லை என்றும் சொல்லிக் கொள்கிறார்கள் . இவர்களுடன் தான் உறவுகளை வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. நாம் வாழும் உலகில் தான் இவர்களும் வாழ்கிறார்கள்.. ஆனால் ஒன்றும் சேதமில்லை. இன்றும் பூதங்கள் மனிதனைக் கண்டு சிரிக்கின்றன. அது ஒன்று போதும்..! 😊😊😊
innraya SINTHANAY - ShareChat