ShareChat
click to see wallet page
search
#🕉️நாக தோஷம் பரிகாரங்கள்🌠 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #அம்மன் ஸ்டேட்டஸ்..🙏 . #ஓம் சக்தி..🔱.# தாயே துணை..🔥 #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 *இன்றைய கோபுர தரிசனம் கோடி புண்ணியம்* 🙏 வெள்ளிக்கிழமை. 02.01.2026. *அருள்மிகு* *ஸ்ரீ வெட்டுடைய காளி அம்மன்* *திருக்கோவில்* கொல்லங்குடி, அரியாக்குறிச்சி, சிவகங்கை மாவட்டம். சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என “வெட்டுடைய அய்யனார்“ என்ற பெயரில் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறிச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள் அரசியை காக்க தகவல் கூற மறைத்து மறுத்ததால் அவளின் சிரத்தைக் கொய்த ஆங்கிலேயர் செயலறிந்த அரசி தன் உயிரைக் காக்க உயிர்த் தியாகம் செய்த பெண்ணிற்கு “வீரக்கல்” அமைத்து வழிபட்டு தனது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாக அளித்தார். அரசியைக் காத்த அந்தப் பெண் தெய்வமே வெட்டுடையார் அம்மை காவல் தெய்வமாக காளியாக அருள் தரும் கோவிலாய் அமர்ந்தாள். பின் நாளில் பிரசித்தமானதால் இத்தளம் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் கோவில் என அழைக்கபடுகிறது. வெட்டுடைய அய்யனாருக்கு நேர் எதிரில் மேற்கு நோக்கிய படி ஸ்ரீ காளியம்மன் அருள்பாலிக்கிறார். எட்டு திருகரத்துடன், வலது கால் மடக்கி இடது கால் அரக்கன் மீதூன்றி கருணை பொங்கும் முகத்தோடு காட்சியளிக்கிறார். பக்தர்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கிறார். பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை முறையிட்டால் உடனே தீர்வு கிடைக்கும் .
🕉️நாக தோஷம் பரிகாரங்கள்🌠 - ٨٥٧ Lllli Pihmlln காளியப் (] ٨٥٧ Lllli Pihmlln காளியப் (] - ShareChat