உன்மீதான பேரன்பை
புரிந்துகொள்ள
பெரிய மெனக்கிடல்கள்
தேவையில்லை..
கொஞ்சமே கொஞ்சம்
நான் தேடிக் கொண்டிருக்கும் போது
தொலைந்து போ..
..
தொலைந்து போக
மனமில்லையென்றால்
கண்டும் காணாமல் இரு
..
பரிதவிக்கும் என்விழிகளுக்கு
உன் சமாதானங்கள்..
..
கண்ணீரை உகுத்தே
பரிசளிக்கும்..
..
அடேய்! அன்பின் வடிவங்கள்
சில அழகானவை..
ஆபத்தானவையும் கூட!! #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்

