##ஐயப்பா #ஐய்யப்பா சரணம் #ayyappa #ayyappan #ஐயப்பன்… #ayyappan whatsapp status #சபரி மலைக்கு வந்து பாருங்க சரணம் அயப்பா #ஒம் சாமியே சரணம் ஐயப்பா # சாமி ##SABP #motivationalquotes_Tamil #motivation #தன்னம்பிக்கை #tamilquotes #motivationalquotes திருவிழா..
📿ஆபரணங்களின் ஆன்மிக அர்த்தம்
🙏 ஐயப்பன் திருவிழா.. ஆபரணங்களின் அர்த்தம்..! 🙏
🛕 சபரிமலையில் துறவு பூண்ட யோக நிலையில் ஐயப்பன் எழுந்தருளியிருக்கிறார். அப்படி இருந்தும் 🌟 மகர விளக்கின் போது பந்தள மகா ராஜாவின் அரண்மனையிலிருந்து கொண்டுவரப்படும் ஆபரணங்களை அணிந்து காட்சி தருவது சிறப்பு. துறவியான சுவாமி ஆபரணங்கள் பூண்டு காட்சி தருவது ஏன்?.. பார்க்கலாம் வாங்க..
🌟 அபூர்வ காரணம்:
✨ ஐயப்பன் தன் அவதார நோக்கத்தின் நிமித்தமாக பந்தள நாட்டை விட்டு சபரிமலைக்கு புறப்படும் போது எல்லாரிடமும் தனித்தனியாக விடை பெற்றுக் கொண்டு வந்தார். அவர்களுள் பந்தள நாட்டில் ஐயப்பனுக்கு குருவாக இருந்த குருவும் ஒருவர்.
🙏 அந்த குருவிடம், சுவாமி உங்களுக்கு நான் குருதட்சணையாக என்ன தர வேண்டும் என்று கேட்டார் ஐயப்பன். குரு நெகிழ்ந்து போய் 🌺 "பெருமானே! நீர் எனக்கு இப்பிறவியில் மாணவன் என்று கூறும் பேறே எனக்கு குருதட்சணை" என்றார்.
👩👦 அவருடைய மனைவியோ ஊமையாகவும், 👁️ குருடனாகவுமிருந்த தங்கள் குழந்தையை குணப்படுத்தி தர வேண்டும் என்று வேண்டினார். குரு பத்தினியின் கோரிக்கைப்படி அந்த குழந்தையின் பிணியை நீங்க செய்தார் ஐயப்பன்.
🤲 அப்பொழுது தம் முன் நிற்பது தெய்வம் என்ற உணர்வை கடந்து நெகிழ்ச்சியுற்ற நிலையில் 🪙 "அய்யனே! நீ தங்கமும், ரத்தினமும் ஜொலிக்க மகாராஜனாய் இருக்க வேண்டும்," என்று ஆசீர்வதித்துவிட்டார் குரு. எல்லாவற்றையும் கடந்த சுவாமிக்கு ஏன் சுவர்ண ரத்தின ஆபரணங்கள் என்ற உணர்வு அந்த குருவுக்கு அப்பொழுது தோன்றவில்லை.
💎 எனினும் குருவின் ஆசி ஆசிதானே. அது பொய்த்து விடக் கூடாதே. அதனால் தான் ஆண்டுக்கு ஒரு முறை 🌟 மகர விளக்கு விழாவின் போது சுவாமி பந்தள ராஜன் பரம்பரையினர் கொண்டு வரும் ஆயிரம் சவரனுக்கு மேற்பட்ட தங்க ரத்தின ஆபரணங்களை அணிந்து காட்சி தருகிறார் ஐயப்பன்.
🌺 ஐயப்பனின் ஆபரண அலங்காரத்தின் பின்னணி:
💖 பக்தியின் தூய்மை: குருவின் பக்தி, ஐயப்பனை ஒரு தெய்வமாக மட்டுமல்லாமல், தனது மாணவனாகவும் பார்க்கும் அளவுக்கு உயர்ந்திருந்தது.
✨ ஆசீர்வாதத்தின் சக்தி: குருவின் ஆசி, ஐயப்பனை மகாராஜாவாக மாற்றியது.
🌟 தெய்வீகத்தின் மனித தன்மை: ஐயப்பன் ஒரு தெய்வம் என்றாலும், அவர் குருவின் ஆசீர்வாதத்தை ஏற்றுக்கொண்டு, அதற்கேற்ப செயல்படுகிறார். இது தெய்வீகத்தின் மனித தன்மையை உணர்த்துகிறது.
🙏 #🔍ஜோதிட உலகம் 🌍


