கேரளாவில் மூவெட்டுப்புழாவில் 4 வயது சிறுவன் கால் தவறி கிணற்றில் விழுந்திருக்கிறார். குடும்பத்தினர் பார்த்து கதற, அந்த வழியே விசாரணைக்காக சென்று கொண்டிருந்த காவல்துறையினரின் காதில் விழுந்திருக்கிறது.
உடனடியாக ஓடிவந்த காவல்துறை நிலைமையை புரிந்து கொண்டிருக்கிறது. 6 அடிக்கு தண்ணீர் இருக்கும் கிணற்றில் அந்த சிறுவன் மூழ்கி கொண்டிருக்கிறான். தீயணைப்பை அழைக்கும் நேரம் இல்லை. உடனடியாக ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்ற நிலை. சப் இன்ஸ்பெக்டர் அதுல் பிரேம் உன்னி உடனடியாக கிணற்றில் இறங்க தொடங்கினார். அவருடன் இருந்த காவலர்கள் ரஞ்சித் ராஜன் மற்றும் ஷினு இருவரும் அதுல் பிரேம் உன்னிக்கு உதவி செய்தனர்.
கிணற்றில் இறங்கி சிறுவனை மீட்டாலும், அதிர்ச்சியிலும், தண்ணீரில் தத்தளித்ததிலும் சிறுவன் மயக்கம் அடைந்து விட்டான். உடனடியாக மேலே ஏறி வர வேண்டும். சிறுவனை தூக்கி கொண்டு மேலேறுவது நேரம் பிடிக்கும். ஆனால் அதுவரை சிறுவன் மயக்கத்தில் இருப்பது ஆபத்து எனக்கருதிய அதுல, கிணற்றுக்குள்ளேயே சிறுவனுக்கு செயற்கை சுவாசம் அளிக்கத்தொடங்கினார். சிறுவனும் நினைவு திரும்பினான்.
அதற்குள் அக்கம்பக்கம் ஆட்கள் வந்ததால், அவர்கள் உதவியுடன் சிறுவனுடன் வெளியே வந்தால் அதுல. மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கூட்டிசெல்லப்பட்ட சிறுவன் தற்போது நலமாக இருக்கிறான்.
ஆபத்து சமயத்தில் உடனடியாக செயலாற்றிய சப் இன்ஸ்பெக்டர் அதுல் பிரேம் உன்னி மற்றும் காவலர்கள் ரஞ்சித் ராஜன் மற்றும் ஷினுவுக்கு கேரளா காவல்துறை சார்பில் பரிசளித்து பாராட்டியிருக்கிறது.
விபத்து ஏற்பட்ட நேரத்தில் அங்கே போலீஸ் இருந்தது அந்த சிறுவனின் அதிர்ஷடம்.
#devacmdjbe #Brahmin_Political_Party #DevaJobPortal #SaiSudhaDevaTrust #SaiDevGroup


