ShareChat
click to see wallet page
search
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஆன்மீகம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Siva Siva 🙏🔱⚜️ வண்டுகள் தேனுண்ணற் பொருட்டு மலர்களைக் கிண்டி இசை பாடும் சோலைகள் சூழ்ந்த திருவலிவலத்துள் மேவிய இறைவனே, மனைவி மக்கள் சுற்றம் முதலான பாசப் பெருங்கடலை இளைய காலத்திலேயே கடந்து வாழ்ந்தேன் அல்லேன். வேதனை. நோய் ஆகியன நலிய உலகியற் பாசங்கள் துன்பம் தருவன என்பதைக் கண்டு உன் திருநாமம் சொல்வதொன்றே இன்பமாவது என்பதைக் கண்டு அதனை ஓத உள்ளம் விரும்புகிறது. அருள் புரிவாயாக. -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - Oibal நமசிவாய 10 பெண்டிர் மக்கள் சுற்றம் என்னும் பேதைப் பெருங்கடலை விண்டு பண்டேவாழ மாட்டேன்; வேதனை நோய் நலிய கண்டு கண்டேஉன்தன் நாமம் காதலிக்கின்றது உள்ளம் - வண்டு கெண்டிப் பாடும் சோலை வலிவலம் மேயவனே! Oibal நமசிவாய 10 பெண்டிர் மக்கள் சுற்றம் என்னும் பேதைப் பெருங்கடலை விண்டு பண்டேவாழ மாட்டேன்; வேதனை நோய் நலிய கண்டு கண்டேஉன்தன் நாமம் காதலிக்கின்றது உள்ளம் - வண்டு கெண்டிப் பாடும் சோலை வலிவலம் மேயவனே! - ShareChat