அர்த்தம்
அப்போ புரியில...
இப்போ புரியிது...
MAKE IN INDIA
SWACH BHARATH
9 ஆண்டுகளில் 100 லட்சம் கடன்
===========================
கடந்த 75 ஆண்டுகளில் இந்தியாவின் கடன் எவ்வளவு???
2014 வரை (67 ஆண்டுகள்) மத்திய அரசின் கடன் எவ்வளவு??
2014 மார்ச் முதல் 2023 மார்ச் வரை நரேந்திர தாமோதர் தாஸ் அரசு வாங்கிய கடன எவ்வளவு???
- ஒரு சிறு அலசல்.
(தகவல் - BBC வேர்ல்ட்)
நாட்டின் கடன் நிலவரம் குறித்து, மத்திய பட்ஜெட் குறித்த அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
‘2014 ஆம் ஆண்டு வரை மத்திய அரசு மீதான கடன் நிலவரம்’ என்ற தலைப்பிலான அந்த விளக்கத்தின்படி, 2014 மார்ச் 31ஆம் தேதி வரை, நாட்டின் மொத்த கடன் 55.87 லட்சம் கோடியாக இருந்துள்ளது.
இவற்றில் உள்நாட்டுக் கடன்கள் 54.04 லட்சம் கோடி ரூபாயாகவும், வெளிநாடுகள் தொடர்பான கடன்கள் 1.82 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.
இவற்றில் ரிசர்வ் வங்கி வெளியிடும் சிறப்பு பங்குகள், வெளிச்சந்தையில் கடன்களை அதிகரிப்பது உள்ளிட்டவை உள்நாட்டு கடன்களாக கருதப்படுகின்றன.
சர்வதேச நிதி நிறுவனங்கள், வெளிநாட்டு அரசாங்கங்கள் உள்ளிட்டவற்றில் இருந்து பெறப்படுபவை வெளிநாட்டு கடன்களாகவும் கருதப்படுகின்றன.
2023 வரை மத்திய அரசின் கடன் எவ்வளவு?
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், 2022-23 நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த கடன் 152.61 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது.
இவற்றில் உள்நாட்டு கடன்கள் 148 லட்சம் கோடி ரூபாயாகவும், வெளிநாட்டுக் கடன் 5 லட்சம் கோடி ரூபாயாகவும் இருக்கும் என்றும் அப்போது மதிப்பிடப்பட்டிருந்தது.
இவற்றுடன் கூடுதல் பட்ஜெட் செலவினங்கள் (Extra Budgetary Resources) மற்றும் நிதி இருப்புகளைச் சேர்த்தால் நாட்டின் மொத்த கடன் 155.77 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது.
நிதி அமைச்சரின் விளக்கம்
இந்த ஆண்டு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது நாட்டின் கடன் நிலவரம் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான நமா நாகேஷ்வர ராவ், எழுத்துப்பூர்வமாக இந்தக் கேள்வியை எழுப்பி இருந்தார்.
அவரது கேள்விக்கு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி எழுத்துப்பூர்வமாக பதிலளித்திருந்தார்.
அதில், “2023 மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, மத்திய அரசின் மொத்த கடன் கிட்டத்தட்ட 155.8 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது(இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 57.3 சதவீதம்).
இவற்றில், வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படும் கடன் 7.03 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் (ஜிடிபியில் 2.6 சதவீதம்) எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது,” என்று மத்திய நிதி அமைச்சர் விளக்கம் அளித்திருந்தார்.
ஆக
2014 மார்ச் வரை சுதந்திரம் பெற்ற பின் 67 ஆண்டுகளில் இந்தியா பெற்றுள்ள கடன 56 லட்சம் கோடிகள்
2014 மார்ச் முதல் 2023 மார்ச் வரை நரேந்திர தாமோதர் தாஸ் அரசு வாங்கிய கடன 156 லட்சம் கோடி???
(தகவல் & நன்றி- BBC வேர்ல்ட்)
Rajkumar Microbe #👨மோடி அரசாங்கம்


