ShareChat
click to see wallet page
search
💞நபிமொழி! ஒரு முறை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக (பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு வியாழக்கிழமையும் திங்கட்கிழமையும் (மனிதர்களின் அனைத்துச்) செயல்களும் (அல்லாஹ்விடம்) சமர்ப்பிக்கப்படுகின்றன. அன்றைய தினத்தில் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், தனக்கு எதையும் இணைவைக்காத ஒவ்வொரு மனிதருக்கும் மன்னிப்பு அளிக்கின்றான்; தமக்கும் தம் சகோதரருக்குமிடையே பகைமை உள்ள ஒரு மனிதரைத் தவிர. அப்போது இவ்விருவரும் சமாதானமாகிக்கொள்ளும்வரை இவர்களை விட்டுவையுங்கள். இவ்விருவரும் சமாதானமாகிக்கொள்ளும்வரை இவர்களை விட்டுவையுங்கள்” என்று கூறப்படுகிறது. – மனிதர்களின் செயல்கள் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை, வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களிலும் (அல்லாஹ்விடம்) சமர்ப்பிக்கப்படுகின்றன. அப்போது, “இறைநம்பிக்கையுள்ள ஒவ்வோர் அடியாருக்கும் மன்னிப்பு அளிக்கப்படுகிறது;தமக்கும் தம் சகோதரருக்குமிடையில் பகைமையுள்ள அடியாரைத் தவிர. அப்போது, “இவ்விருவரும் (சமாதானத்தின்பால்) திரும்பும்வரை இவ்விருவரையும் விட்டுவையுங்கள். அல்லது தாமதப்படுத்துங்கள்” என்று கூறப்படுகிறது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. Book : 45 (முஸ்லிம்: 5014) #🕋யா அல்லாஹ்
🕋யா அல்லாஹ் - இல்லாஹ் ٧٢ எங்கள் குற்றங்களை மன்னித்தருள்வாயாக! அதிகம் மன்னிப்பவனே! அருள் புரிபவனே! பாவங்களை மறைப்பவனே! அல்லாஹீ? [ ரஹ்மத்தை பொழிபவனே! துன்பங்கள் அனைத்தையும் விட்டும் எங்களை நீ காப்பாற்றுவாயாக! Cuill ரஹ்மானே! Wm P இல்லாஹ் ٧٢ எங்கள் குற்றங்களை மன்னித்தருள்வாயாக! அதிகம் மன்னிப்பவனே! அருள் புரிபவனே! பாவங்களை மறைப்பவனே! அல்லாஹீ? [ ரஹ்மத்தை பொழிபவனே! துன்பங்கள் அனைத்தையும் விட்டும் எங்களை நீ காப்பாற்றுவாயாக! Cuill ரஹ்மானே! Wm P - ShareChat