ShareChat
click to see wallet page
search
#🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலம்பாக்கம் அருகே நன்மங்கலம் ஆஞ்சநேயர் கோவிலில் திருக்கூடார வல்லி உற்சவம்....* சென்னை, மாதங்களில் சிறந்தது மார்கழி. அதை தனுர் மாதம் என்றும் போற்றுகிறோம். மார்கழி மாதம் தேவர்களின் நேரமான விடியற்காலையில் "யார் ஒருவர் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, பக்தியுடன் இறைவனை வழிபடுகிறார்களோ அவர்கள், ஆயிரம் ஆண்டுகள் பகவானை வழிபாடு செய்த பலன்களை தனுர்மாதமான மார்கழி மாத ஒருநாள் வழிபாட்டில் கிடைக்க பெறுகிறார்கள். மாதம் முழுவதும் வழிபட்டால் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பது கணக்கில் அடங்காது. சிவ-பார்வதியின் அருளைப் பெறுவதற்காக திருவெம்பாவையையும் பகவான் ஸ்ரீமன் நாராயணன் அருள் பெறுவதற்கு திருப்பாவையையும் மார்கழியில் அதிகாலையில் பாராயணம் செய்பவர்களுக்கு இறை அருள் விரைவில் பெறுவர். இந்தநிலையில், கூடாரவல்லி தினம் என்றால், கண்ணன், ஆண்டாளை ஆட்கொள்ளப் போவதாக ஆண்டாள் உறுதியாக நமக்கெல்லாம் நம்பிக்கையை ஏற்படுத்திய நன்னாள். ஜீவாத்மா - பரமாத்மா தத்துவத்தில், பரமாத்மா வந்து ஜீவாத்மாவை தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொள்வது உறுதி என்பதை நிரூபித்த வைபவம்... கூடாரவல்லி திருநாள். இன்று கூடாரவல்லித் திருநாள் அனைத்து பெருமாள் கோவில்களிலும் வெகுவிமர்சையாக நடைபெற்றது. அந்தவகையில், சென்னை கோவிலம்பாக்கம் அருகே நன்மங்கலத்தில் உள்ள ஸ்ரீத்ரிநேத்ர தசபுஜ வீர மங்கள ஆஞ்சநேயர் கோவிலில் திருக்கூடார வல்லி உற்சவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. ஆண்டாள், பெருமாள்,ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை நடைபெற்றது. சுவாமிக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமபாத சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்தனர். 🙏🙏🙏🙏🙏
🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் - ShareChat