ShareChat
click to see wallet page
search
மனுஷாளவிட ஒனக்கு உப்பு, புளி, மொளகா... மளிகைதான் பெருஸா போய்டுத்தா? தஞ்சாவூரில் ஒரு கிராமத்தில் உள்ள ஒரு பெரிய மனிதர் வீட்டுக்குள் திடீரென்று பெரியவா நுழைந்தார். வரவேற்க எந்த ஏற்பாடும் இல்லை. பெரியவா அந்த வீட்டு மனிதர்களைக் கூட எதிர்பார்க்காமல், தானே..... முற்றம், தாழ்வாரம், கூடம் என்று எல்லா இடங்களுக்கும் ரொம்ப ஸ்வாதீனமாக போனார். வீட்டு பெரியவர் பரபரப்புடன் ஓடி வந்தார். "பெரியவா எங்காத்துல பாதம் பதிச்சது பரம பாக்யம்...." பெரியவா அவர் சொன்னதைக் கண்டு கொள்ளவேயில்லை. பின் தாழ்வாரத்தில் ஒரே ஒரு அறை மட்டும் வெளியே பூட்டப்பட்டிருந்தது. பெரியவா அதன் முன் போய் நின்றார். ஜாடையில் அதை திறக்கச் சொன்னார் பெரியவா. வீட்டுக்காரரோ தயங்கினார். "அதுல வெறும் ஸாமான் போட்டிருக்கு பெரியவா...." பெரியவா ஒரு வார்த்தை பேசவில்லை. அந்த இடத்தை விட்டு நகரவுமில்லை. அழிச்சாட்டியமாய் அங்கேயே உட்கார்ந்து விட்டார். வீட்டுக்காரர் வேறு வழியின்றி கதவை திறந்தார். கதவை திறந்ததும், யாரோ ஒருத்தர் உள்ளேயிருந்து ஓடி வந்து பெரியவா ஶரணத்தில் விழுந்து கதற ஆரம்பித்தார் . "தெய்வமே! பெரியவா, என்னைக் காப்பாத்த நீங்களே வந்துட்டேளா! நான் எந்த தப்பும் பண்ணலை. இவா என்னை ரொம்ப ஹிம்ஸை பண்றா" என்று அழுதார். பெரியவா அவரை கருணை பொங்கப் பார்த்தார். அதே க்ஷணத்தில் தன்னுடைய ருத்ரமுகத்தையும் அந்த வீட்டுக்காரருக்கு காட்டினார். "என்னது இது? ஸாமான் வெச்சிருக்கற ரூமா?..." "இல்ல....பெரியவா இவன் எங்காத்ல ஸமையல் பண்றான். ஒரே திருட்டுபுத்தி! மளிகை ஸாமானெல்லாம் ஒண்ணொண்ணா அபேஸ் பண்றான். ஒத்துக்க மாட்டேங்கறான்" "நான் எந்த ஸாமானையும் திருடவேயில்லை பெரியவா....அந்யாயமா எம்மேல பழி போட்டு, தண்ணி கூட குடுக்காம ஹிம்ஸை பண்றா....காப்பாத்துங்கோ! பெரியவா" பாவம், அழுதார். "மனுஷாளவிட ஒனக்கு உப்பு, புளி, மொளகா... மளிகைதான் பெருஸா போய்டுத்தா? மடத்துலேர்ந்து, இவன் திருடினதா சொல்ற மளிகை ஸாமான் எல்லாத்தையும் தரச் சொல்றேன். இனிமே இப்டி கொடூரமா நடந்துக்காதே! வேலை செய்யறவாளும் மனுஷாதான்! அவாட்ட ப்ரியமா நடந்துக்கோ!" அடுத்த க்ஷணம் விறுவிறுவென்று வெளியே போய்விட்டார். அறைக்குள் அடைத்து #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #மகாபெரியவா #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🌼வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் #✡️புரட்டாசி ஸ்பெஷல் ஜோதிடம் வைக்கப்பட்ட ஜீவனின் ஓலம் அந்தராத்மாவுக்கு தெரியாதா என்ன? பெரிவா கருணையே கருணை 🙏🙏 ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர.
🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - ShareChat