👉 என் நிதர்சன சிந்தனை துளிகள் 👈
காலம் உணர்த்தும் உண்மை
கூட்ட நெரிசலில் தவறவிட்ட சில்லறையை எடுக்க சிரமமாக இருக்கும் என்று நாம் பரவாயில்லை என அப்படியே விட்டு செல்வதை போல சில சில்லறை மனிதர்களையும்
அப்படியே விட்டு விலகி சென்று விடுங்கள் ஏனெனில் சிரமப்பட்டு எடுத்து வைத்துக் கொள்ள அவர்கள் ஒன்றும் சிறந்தவர்கள் அல்ல போனது போகட்டும் அடுத்தது அற்புதமாகட்டும்...!!
தன்மானத்தை இழந்து எதையும் அடைய வேண்டும் அவசியம் இல்லை எந்த இடத்தில் உன்னை வைக்கிறார்களோ அதே இடத்தில் அவர்களையும் நீ வைத்துவிடு உறவுகள் முக்கியம் தான் அதைவிட சுயமரியாதை முக்கியம்...!!
பிறவி குணம்
உடன் பிறந்தவர்களாக இருந்தாலும் நண்பர்களாக இருந்தாலும் கணவன் மனைவியாக இருந்தாலும் பெற்ற குழந்தைகளாக இருந்தாலும் பேரன் பேத்திகளாக இருந்தாலும் எந்த உறவுகளாக இருந்தாலும் அவர்களது பிறவி குணம் ஒரு போதும் மாறாது...!!
எதைச் செய்ய வந்தார்களோ அதை செய்வதுதானே அவர்களின் விதி இதை நாம் மாற்றி அமைக்க முடியுமா என்ன
சற்று ஒதுங்கி நின்று வேடிக்கை பார் பந்த பாசத்தில் உள்ளே விழுந்து அறிவுரை சொல்லுகிறேன் என்று கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்காதே...!!
நம்முடைய எண்ணம் தான் வாழ்க்கை நமது வலிமையான எண்ணங்களே நமது வாழ்க்கையை தீர்மானிக்கிறது இன்று நம்பிக்கையுடன் எது நடக்கும் என்று நம்புகிறீர்களோ அது நிச்சயம் நாளை நடக்கும் என்பதே உண்மையாகும்...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #💝இதயத்தின் துடிப்பு நீ #💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #🤔தெரிந்து கொள்வோம் ##ஷேர்சாட் டிரெண்டிங்


