Wattsup இல் வந்தது
இந்த செய்தியில் உள்ள இவரது வீட்டிற்கு இரண்டு மின் இணைப்புகள் உள்ளது. இரண்டையும் இவரே உபயோகித்து வருகிறார்.
இந்த இரண்டு மின் இணைப்புகளும் மெர்ஜ் செய்யப்பட்டுள்ளது.
இரண்டு மின் இணைப்புகளிலும் சேர்த்து 700 யூனிட்டுகளுக்கு மேல் உபயோகித்து வருகிறார். கடந்த ஓர் ஆண்டாக மூவாயிரத்தில் இருந்து நான்காயிரம் வரை மின் கட்டணம் வந்துள்ளது.
கடந்த 10/2025 மாதம் இவரது இரண்டு மின் இணைப்புகளிலும் சேர்த்து 1094 யூனிட் உபயோகித்துள்ளார்.
மின் கட்டணம் ரூபாய் 7963 வந்துள்ளது.
கணக்கீட்டில் எந்த ஒரு தவறும் இல்லை.
ஆனால் இந்த செய்தியை பார்ப்பவர்கள் மின் கட்டணம் தவறாக கணக்கிடப்பட்டுள்ளதாக கூறுவார்கள்.
இது போன்ற செய்திகள் மின் வாரிய பணியாளர்களையும், மின் வாரியத்தையும் மக்கள் தவறாக நினைக்க தோன்றும்.
எனவே இது போன்ற செய்திகள் வந்தால், அதன் உண்மைதன்மையையும் சேர்த்து அனுப்புங்கள். #மின்சாரம் அவசியம்


