கொழுப்பு கல்லீரல் நோய் இந்தியாவில் மட்டுமின்றி, உலகளவில் அதிகரித்து வரும் ஒரு கவலைக்குரிய பிரச்சனையாக உள்ளது. அதுவும் உலகில் மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மதிப்பீடுகளின் படி, உலகளவில் சுமார் 32% பெரியவர்களுக்கு இந்த நிலை இருப்பதாக தெரிய வந்துள்ளது.
அதுவும் 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சுமார் 1.2 முதல் 1.6 பில்லியன் மக்களுக்கு இந்நிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மேற்கொண்ட சமீபத்திய கணக்கீடுகளின் படி, பெரியவர்களில் 35-40% பேரும், குழந்தைகளில் சுமார் 35% பேரும் மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயால் (NAFLD) பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக இந்த கொழுப்பு கல்லீரல் அமைதியாக உடலில் உருவாகும். இதனால் இது ஒரு அமைதியான தொற்றுநோயாக கருதப்படுகிறது. இப்படியான கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்படுவதற்கு மோசமான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சியின்மை போன்ற வாழ்க்கை முறை காரணிகள் தான் முக்கிய காரணங்களாகும். குறிப்பாக குழந்தைகளும் இந்த நோயால் பாதிக்கப்படுவது தான் மிகப்பெரிய கவலைக்குரியதாக இருக்கிறது.
இப்படிப்பட்ட கொழுப்பு கல்லீரல் நோய் ஒருவருக்கு இருப்பதை எப்படி கண்டறிவது என்று பலரும் கேட்கலாம். பொதுவாக நமது கல்லீரலில் பிரச்சனை இருந்தால், அது ஒருசில அறிகுறிகளை நமக்கு வெளிக்காட்டும். அதுவும் கொழுப்பு கல்லீரல் பிரச்சனை இருப்பின் நிச்சயம் சில அறிகுறிகளை நமக்கு உணர்த்தும். ஆரம்பத்திலேயே இந்த அறிகுறிகளை கவனித்து சிகிச்சை மேற்கொண்டால் நிலைமை மோசமாவதை தடுக்கலாம். இல்லாவிட்டால், அது தீவிரமாகி மரணத்தை ஏற்படுத்தலாம்.
ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்டில் படித்த இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொழுப்பு கல்லீரல் நோயின் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகளை பகிர்ந்துள்ளார். இந்த அறிகுறிகள் தெரிந்தால், தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.
1. எடை அதிகரிப்பு
எதிர்பாராத அளவில் உடல் எடை அதிகரிப்பதை நீங்கள் உணர்ந்தால் உங்களுக்கு கொழுப்பு கல்லீரல் நோய் இருப்பதற்கான வாய்ப்புள்ளது. முக்கியமாக திடீரென்று அடிவயிற்றுப் பகுதியைச் சுற்றி கொழுப்புக்களானது தேங்யிருந்தால், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பாருங்கள்.
2. தொடர்ச்சியான உடல் சோர்வு மற்றும் பலவீனம்
இரவு நல்ல நிம்மதியான மற்றும் ஆழ்ந்த தூக்கத்தை மேற்கொண்ட பின்னரும் மிகுந்த உடல் சோர்வையும், உடல் பலவீனத்தையும் சந்தித்தால், கல்லீரலில் மிகப்பெரிய பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். எனவே போதுமான ஓய்வை எடுத்த பின்னரும், காரணமின்றி தொடர்ச்சியாக உடல் சோர்வை சந்தித்தால், மருத்துவரை உடனே அணுகுங்கள்.
3. அடிவயிற்று வலி மற்றும் மேல் வயிற்று வீக்கம்
அடிவயிற்றுப் பகுதியில் மிகுந்த வலியுடன், ஒருவரது மேல் வயிற்றின் வலது பக்கத்தில் வீக்கம் ஏற்பட்டிருந்தால், அது கொழுப்பு கல்லீரல் நோயின் அறிகுறியாக இருக்கலாம். ஆகவே காரணமில்லாமல் அடிவயிற்று பகுதியில் திடீரென்று அதிக வலியை உணர்ந்தால் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
4. உயர் இரத்த சர்க்கரை
இரத்த சர்க்கரை அளவு குறையாமல் எப்போதும் உயர் நிலையில் இருந்தால், அந்நபருக்கு கொழுப்பு கல்லீரல் நோய் இருப்பதற்கான வாய்ப்பு நிறைய உள்ளது. சொல்லப்போனால், இது கொழுப்பு கல்லீரல் நோயின் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகளுள் ஒன்றாகும். எனவே இரத்த சர்க்கரையை எப்போதும் கண்காணித்து வாருங்கள்.
5. அடர் நிற சிறுநீர் மற்றும் வெளிரிய நிறத்தில் மலம்
எப்போது ஒருவர் மிகவும் அடர் நிறத்தில் சிறுநீரையோ அல்லது வெளிரிய நிறத்தில் மலத்தை வெளியேற்றுகிறாரோ, அந்நபரின் கல்லீரல் சரியாக செயல்படாமல் உள்ளது என்பதன் எச்சரிக்கை அறிகுறியாகும். அடர் நிறத்தில் சிறுநீர் கழிப்பது என்பது உடல் சூட்டினாலும் ஏற்படலாம். ஆனால் அப்படி உடல் வெப்பமடையும் வகையில் எதுவும் செய்யாமல், ஒருவர் அடர் நிறத்தில் சிறுநீரை கழித்தால், அந்நபருக்கு கொழுப்பு கல்லீரல் இருக்க வாய்ப்புள்ளது.
6. மஞ்சள் நிற கண்கள் மற்றும் சருமம்
ஒருவரது சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால், இரத்தத்தில் பிலிரூபின் அதிகம் உள்ளது என்று அர்த்தம். எப்போது கல்லீரலால் சரியாக செயல்படாமல் போகிதோ, அப்போது இரத்தத்தில் பிலிரூபின் அதிகரிக்கும். சொல்லப்போனால், இது கொழுப்பு கல்லீரல் நோயின் முற்றிய நிலையின் எச்சரிக்கை அறிகுறியாகும்.
7. உயர் கொலஸ்ட்ரால்
ஒருவரது உடலில் கட்டுப்பாடு இல்லாமல் கொலஸ்ட்ரால் அளவுகள் அதிகமாக இருந்தால், அந்நபருக்கு கொழுப்பு கல்லீரல் நோய் இருப்பதற்கான வாய்ப்பும் அதிகமாக உள்ளது. எனவே கொழுப்பு கல்லீரல் இருப்பதை ஆரம்பத்திலேயே கண்டறிய இரத்த கொலஸ்ட்ராலை பரிசோதனை செய்து பாருங்கள்.
8. இரத்தக்கசிவுடன் காயங்கள்
சருமத்தில் கடுமையான அரிப்புக்களை சந்திப்பதோடு, அப்படி அரிப்பதனால் சருமத்தில் காயங்கள் ஏற்பட்டால், கொழுப்பு கல்லீரல் நோய் முற்றிய நிலையில் இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே உங்கள் சருமத்தில் இப்படி அரிக்கும் போது எளிதில் காயங்கள் ஏற்பட்டால், உங்களுக்கு கொழுப்பு கல்லீரல் நோய் இருக்க வாய்ப்புள்ளது. #🏋🏼♂️ஆரோக்கியம்
சர்க்கரை நோய்க்கு சித்த மருத்துவ மருந்து ....
நாவற்கொட்டை தூள்,
வேப்பங் கொழுந்து,
வேப்பம் பூ,
துளசி,
ஆவாரம் பூ,
ஆவாரை இலை,
நெல்லி வற்றல்,
கடுக்காய்,
தான்றிக்காய்,
சுக்கு,
மிளகு,
திப்பிலி,
வெந்தயம்,
கறிவேப்பிலை,
கீழாநெல்லி,
இவற்றில் கிடைப்பதைக் கொண்டு தூள் செய்து தினமும் இருவேளை ஒரு ஸ்பூன் தண்ணீரில் குடித்து வரலாம்.
நாம் தயார் செய்யத் தேவையில்லை.
சர்க்கரைக் கொல்லி சூரணம் என்று நாட்டு மருந்துக் கடையில் கேட்டால் கிடைக்கும்.வாங்கிப் பயன் படுத்தலாம்.
இதனுடன் உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் சேர்ந்தால் , கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
சர்க்கரை அளவு கூடுதலாக இருந்தால், மாத்திரை மூலம் தான் கட்டுப் படுத்த இயலும் என்றால் , மாத்திரையையும் சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள்.மாதாமாதம் சர்க்கரை அளவை சோதித்துக் கொள்ளுங்கள்.
உணவில் பாகற்காய், சுண்டைக்காய், மணத்தக்காளி, பீன்ஸ், வாழைப்பூ, வாழைத்தண்டு போன்ற துவர்ப்பும் கசப்பும் உள்ள பொருட்களை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
#💊சர்க்கரை நோய்