YBM டிராவல்ஸ் நிறுவனர்தான் பாலாஜி. முதலியார் சமூகத்தை சேர்ந்தவர், கொளத்தூர் தொகுதியில் நன்கு அறியப்பட்டவர். பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் பாதிக்கப்படும் மக்களுக்கு உறுதுணையாகவும் இருந்து வருகிறார் என்கிறார்கள் அப்பகுதி மக்கள். தவெக முதல் மாநாடு தொடங்கி, அண்மையில் நடந்த கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தனது பேருந்துகளில் அழைத்து வந்து, விஜயை சந்திக்க வைத்து மீண்டும் கரூரில் போய் பத்திரமாக இறக்கி விட்டது இவரது டிராவல்ஸ் நிறுவனம்தான்.
சேகர்பாபுவின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்துள்ள திமுகவினரும், தவெக வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் மனநிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆகவே, பாலாஜி கொளத்தூர் தொகுதியில் களமிறங்க இப்போதே தயாராகி விட்டதாக கூறுகிறார்கள் தவெக நிர்வாகிகள். திமுகவின் பாகுபலி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் மீது அதிதீக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ள விஜய், அந்த தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியலை முன்பே அறிவிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த லிஸ்டில் கொளத்தூர் தொகுதியை முதலிடத்தில் வைத்துள்ளார் விஜய் என்கிறார்கள் பனையூர் வட்டாரத்தினர் #📢 நவம்பர் 28 முக்கிய தகவல்🤗 #தமிழக அரசியல் களம்


