#😢கரூர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 39 பேர் பலி கரூர் துயரம் - போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளவை
▪️ 12.45 மணிக்கு விஜய் கரூரில் பேசுவார் என த.வெ.க. அறிவித்திருந்தது. ஆனால் 5 மணி நேர தாமதமாகத்தான் அங்கு வருகை தந்தார்.
▪️ பேருந்தின் முன்சீட்டில் அமர்ந்திருந்த விஜய், திருக்காம்புலியூர் சந்திப்பை தாண்டியதும் லைட் ஆப் செய்துவிட்டு உள்ளே சென்றார். இதனால், சாலை நெடுக அவரை பார்க்க காத்திருந்தவர்கள், கூட்டம் நடக்கும் இடத்திற்குச் சென்றால் பார்க்க முடியும் என நினைத்து, கூட்டம் நடக்கும் இடத்தை நோக்கி வந்துள்ளனர்
▪️ அதிகப்படியான கூட்டம் கூடியதால் சூழல் கட்டுக்குள் இல்லாமல் போனது. 10,000 பேர் வருவார்கள் என அனுமதி வாங்கப்பட்ட இடத்தில் 25,000 முதல் 27,000 பேர் வரை திரண்டனர்
▪️ கட்சியில் இருந்து கூட்டத்தை ஒழுங்கு செய்ய தன்னார்வலர்கள் இல்லை. குடிநீர், மருந்து, மருத்துவக் குழு எதுவும் அங்கே இல்லை
▪️ காலை முதல் கடும் வெயிலில் காத்திருந்த மக்கள், கூட்ட நெரிசலில் சிக்கியுள்ளனர்
▪️ 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.
#விஜய் #💪தி.மு.க #🔷காங்கிரஸ் #📺அரசியல் 360🔴