2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி "அதிமுக ஆட்சி அமைந்தால் ரூ.2,000 வழங்கப்படும்" என்று வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதியைத் தொடர்ந்து திமுக அரசு இந்த முயற்சியை முன்னெடுத்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் பார்வை செலுத்துகின்றன.
விரைவில் அமல்படுத்தும் வாய்ப்பு
நிதித்துறை சாதகமான அறிக்கையை சமர்ப்பித்தால், வரும் ஜனவரி மாதத்திலிருந்து ரூ.2,000 வழங்கும் திட்டம் அமலுக்கு வரலாம் என கூறப்படுகிறது. இது மகளிர் உரிமை திட்டத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
தமிழகத்தில் பெண்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதால், அரசியல் மட்டுமல்ல, மக்களின் வாழ்விலும் இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது #❌உரிமை தொகை: இனி விண்ணப்பிக்க முடியாது😮 #🔴இன்றைய முக்கிய செய்திகள்


