#🌑மகாளய அமாவாசை🙏 #🛕புரட்டாசி மாதம் வழிபாடு *புரட்டாசி மாதம் 17ம் நாள் 03-அக்டோபர் -25 வெள்ளிக்கிழமை விஜயதசமி* *மறுநாள்*
புனிதமான கிருஷ்ணா நதி தீரத்தில் அமைந்த
இந்திரகீல பர்வத மலையில்
மகிஷாசுரனை வதம் செய்துவிட்டு வந்து
பொன்னிறமாக கனக துர்காவாக
காட்சி தரும் ஸ்ரீ துர்காதேவியை தரிசனம் செய்து போற்றி வணங்கிடுவோம் வாரீர்
ஸ்ரீ துர்காதேவி மகிஷாசுரனை அழித்த மகிழ்ச்சியில் தங்க மழை பொழிந்த கனக துர்க்கையே
எட்டு கைகளில் எட்டு ஆயுதங்கள் ஏந்தி நவராத்திரி விழாவை நிறைவு செய்யும் கனக துர்க்கையே
சும்பன் நிசும்பன் சரபாசுரன் மகிஷாசுரன் துர்க்காசுரனை அழித்து விஜயவாடாவில் அமர்ந்தாயே
கீலா அசுரன் தேவியை தவமிருந்து சதா தன் இதயத்தில் வாசம்செய்ய வேண்டிட தேவியின் வாக்குப்படி
கீலா மலையாக உருவெடுக்க எட்டு கரங்களோடு பொன்னாக ஜொலிக்க மலைமீது குடிகொண்டவளே தேவி
ஐச்வர்யம், தர்மம், புகழ், பொருள், வைராக்கியம், ஞானம் ஆகிய ஆறு குணங்களையும் பூரணமாகப் பெற்ற மஹாமாயா ஸ்வரூபிணியே
துர்கே ஸம்ருதா ஹரஸி பீதி-மசேஷ ஜந்தோ, பயத்தை நீ அழித்து விடுகின்றாய்.தேவி
ஸ்வஸ்தை: ஸ்ம்ருதா மதிமதீவ சுபாம் ததாஸி , அடியவர் அன்போடு துதித்தால் நலன்கள் பல தருகிறாய் தேவி
தாரித்ர்ய-து:க-பய-ஹாரிணி வறுமை, துக்கம், பயம் இவற்றையெல்லாம் உனை நினைந்தால் அபகரித்திடுவாய் தேவி
ஸர்வோபகார- கரணாய ஸதார்த்ர-சித்தா உனையன்றி கருணைக்கடல் வேறு ஒருவருமில்லை தேவி
ஸர்வ மங்கள-மாங்கல்யே சிவே ஸர்வார்த-ஸாதிகே சரணாகத-தீனார்த்த-பரித்ராண-பராயணே தேவி நமோஸ்துதே
🪷🪷🪷 #🙏ஏகாதசி🕉️ #🌙சந்திர தரிசனம்🔯 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶


