ShareChat
click to see wallet page
search
நடிகர் அரசியலின் பின்னணி மர்மம் ================///============== RSS ஒரு விசித்திர இயக்கம். இதன் செயல்பாடுகள் இன்றைகான திட்டமாக இருக்காது. 5, 10, 15, என பல ஆண்டுகளுக்கு பின் வருவதை இன்றிலிருந்தே திட்டமிடும். இதன் சாராம்சம் யாருக்கும் தெரியாது. இதன் மாவட்ட நகர நிர்வாகிகள் யார் என்பது கூட யாருக்கும் தெரியாது. காங்கிரஸ் கட்சியை இந்தியாவில் பலவீனப்படுத்த இது எடுத்த முயற்சிகள் பல ஆண்டுகளுக்கான திட்டமாகும். அதற்காக அது கட்சிக்கு உள்ளேயே ஊடுருவியது. இந்தியாவில் காந்தி கொலை, இந்திராகாந்தி கொலை, ராஜீவ்காந்தி கொலை இதன் பிந்தைய மர்மங்கள் மக்கள் அறிய இயலாது உச்சம். RSS-ன் பக்கா ஸ்கெட்ச்சான அத்வானி ரத யாத்திரை, வி.பி.அரசு கவிழ்ப்பு, பாபர் மசூதி இடிப்பு, என திட்டங்களின் வீரியம் நீண்டது. நிகழ்கால கட்டத்தில் அன்னாஅசாரே என்கிற போலி தேசபக்தர் நடத்திய போராட்டங்களையும் நினைவில் கொண்டு வந்து கொள்ளுங்கள். இன்னும் இவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார், ஆனால் செய்த பிராடுத்தனம் முடிந்த பின் திரைமறைவில் மறைந்து விட்டார். RSS-ல் அரசியல் பிரிவு BJP, தொழிற்சங்க பிரிவு BMS, மற்றும் சங்பரிவார், பஜ்ரங்தள், என 32 ககு மேல் உட்பிரிவுகள் உள்ளன. இவை அனைத்தும் ஒரே நோக்கத்திற்காக பல முனைகளில் செயல்படும். பிஜேபியின் பல அமைச்சர்கள், பல தலைவர்களுக்கு கூட இதன் திட்டங்கள் தெரியாது. தேசப்பிதா காந்தியை கூட மக்கள் மறக்கிறார்கள். ஆனால்...... காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே யின் அஸ்தி இன்னும் கடலில் கரைக்கப்பட வில்லை. நாக்பூர் RSS கட்டிடத்தில் மறக்கக்கூடாது என்பதற்காக, அஸ்தி பத்திரமாக பாதுகாக்கப்படுகிறது. ஏனென்றால் கோட்சேக்கு இன்னும் வேலை இருக்கிறதாம். இதன் மூலம் இதன் எதிர்கால வியூகத்தை யூகிக்கலாம். இப்போது விஜய்-க்கு வருவோம். தமிழ்நாட்டில் பிஜேபியால் கால் ஊன்ற முடியவில்லை. எடுத்த பல வியூகங்கள் பலன் அளிக்கவில்லை. இதற்கு காரணம் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, என இரண்டு கட்சிகள் நேர் எதிர் எதிரே நிற்கிறது. ஆகவே இதில் ஒரு கட்சியை அழிக்க வேண்டும். அப்போது தான் இன்னொரு பிரதான கட்சி உள்ளே வரமுடியும். திமுகவை அழிக்க முடியாது. ஆனால்... அதிமுகவை அழிக்கலாம். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பிஜேபி மூலமாக அதிமுக பலவீனப்படுத்தப்பட்டு, சில துண்டுகளாக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் எல்லோரும் எதிர்பார்ப்பது போல, 2026 தேர்தலுக்கு RSS வியூகம் போடவில்லை. 2031 ஆண்டுக்கு தான் வியூகம் போட்டிருக்கிறார்கள். இது எப்படி....? நடிகர் விஜய் ஏற்கனவே வருமானவரி பிரச்சினையில் சிக்கியிருக்கிறார். இது அனைவரும் அறிந்ததே.... இதை அடிப்படையாகக் கொண்டு அவர் வளைக்கப்பட்டு விட்டார். இதன் பின் புஸ்ஸி ஆனந்த் என்பவர் நடிகர் விஜய்யுடன் இணைத்து வைக்கப்பட்டுள்ளார். இந்த புஸ்ஸி ஆனந்த் பாண்டிச்சேரியை சேர்ந்தவர். முன்னாள் எம்எல்ஏ பிஜேபி அமைச்சர் நமச்சிவாயத்திற்கு மிகவும் நெருக்கமானவர். பிஜேபியின் முன்னணி தலைவர்கள், உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மூத்த தலைவர்களுடன் நெருக்கமான உறவில் இருப்பவர். இவர் தான் நடிகர் விஜய் கட்சியின் பொதுச்செயலாளர்... புதிய கட்சியை பதிவு செய்ய, டெல்லியில் தேர்தல் ஆணையத்திற்கு புஸ்ஸி ஆனந்த் சென்ற போது, உடன் கருப்பு கோட் அணிந்து சென்றவர் பெயர் பிரகாஸ். இவர் மோடிக்கு மிகவும்வேண்டியவர் So... இவர் தான்.....! இப்போது இவரிடம் தான் நடிகர் விஜய்யின் சாவி உள்ளது. ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், நடிகர் விஜய் பிஜேபிக்கு தான் வேலை செய்கிறார் என்கிற செய்தி..... லோக்கல் பிஜேபி தலைவர்களுக்கே தெரியாமல் வைக்கப்படும். எனவே அவர்கள் புரியாமல் பேசுவார்கள். இதன் மூலம் மக்கள் மத்தியில் விஜய் பிஜேபிக்கு எதிரானவர் என்பது போன்ற மாய பிம்பம் கட்டமைக்கப்படும். நடிகர் விஜய் நடத்திய ரசிகர் மாநாட்டில், மத்திய அரசுக்கு கட்டுப்பட்ட டோல்கேட்டுகள், பணம் வாங்காமல் வேன்களை தாராளமாக அனுப்பி வைத்ததை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சாதாரணமானவர்களுக்கு இது சாத்தியமாகாது. இனி நடக்க உத்தேசிக்கப்பட்டிருப்பது இது தான். விஜய் திமுக கொள்கைகளை அப்படியே ஏற்று எதிரொலிக்க வேண்டும். கூடவே பிஜேபியை எதிர்ப்பதாக காட்டிக்கொள்ள வேண்டும். இப்போது பிளவுபட்டு உள்ள அதிமுக அணிகள் இணைந்து விடாமல் பிஜேபி பார்த்துக்கொள்ளும். தேவைப்பட்டால் மேலும் துண்டுகளாக்கும். பல்வேறு ரைடுகள் மற்றும் நெருக்குதல் மறைமுகமாக எடப்பாடி அதிமுகவை பலவீனப்படுத்தும். நடிகர் விஜய் திமுக கூட்டணியை உடைத்து அதில் உள்ள ஏதாவது கட்சியை விலக்க வேடமணிந்து முயற்சி மேற்கொள்ள வேண்டும். மேலும் நடிகர் விஜய், அண்ணா, எம்ஜிஆர் பெயரை சொல்லி பேசவேண்டும். அதன் மூலமாக அதிமுக தொண்டர்களை குழப்பி ஏமாற்ற வேண்டும். மற்றும் திமுகவை எதிர்ப்பது போன்ற காட்சிகளை அமைத்து அதன் மூலம், அதிமுகவை பலவீனப்படுத்தும் முகமாக அதிமுக-தொண்டர்களின் ஓட்டுகளை பிரித்து பெற முயற்சிக்க வேண்டும். மேலும் நடிகர் விஜய் தேர்தலில் தனித்து தான் நின்று போட்டியிட வேண்டும். இவருக்கு கொடுக்கப்படும் முக்கிய அசைமண்ட் ஓட்டுக்களை பிரிக்க வேண்டும் என்பது மட்டும்தான். இதன் மூலம் பிஜேபி அணிக்கு சாதகம் ஏற்படவேண்டும். தமிழ்நாட்டில் தொங்கு சட்டசபை வரவேண்டும். அதிமுக முழுமையாக பலம் இழந்து விட காரணமாக இருக்க வேண்டும்‌. அதன் பின் அதிமுக தலைவர்கள் படிப்படியாக பிஜேபியில் இணைக்கப்படுவார்கள். 2029-,ம். ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் விஜய் உட்பட அனைவரும் பிஜேபி கூட்டணியில் இணைந்து செயல்பட வேண்டும். பின்பு 2031 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு நடிகர் விஜய் தன்னுடைய கட்சியை..... முன்பு ஆந்திராவின் நடிகர் சிரஞ்சீவி கட்சி ஆரம்பித்து இணைத்தது போல, பிஜேபியில் இணைத்து விடவேண்டும். அதன் பின்பு நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டில் இல்லை. மாறாக, அகில இந்திய அளவில் கட்சி பதவி ஒன்று கொடுக்கப்படும். படிப்படியாக தமிழ்நாட்டில் பிஜேபியை நிலைநிறுத்தி வைக்க RSS-ன் செயல் திட்டம் இதுதான். ஆனால்.... இங்கே தான் இவர்கள் அறியாத டுவிஸ்ட்டே நடக்கும். இது மற்ற மாநிலங்களில் இது குறித்து புரியாமல் அனைவரும் செயல்படுவதால் அங்கு இது சாதிக்கப்படும். ஆனால் தமிழ்நாட்டில் பகுத்தறிவுடன் செயல்படும் தலைவர்கள், தங்களின் பணியை சரியாக, இதை முழுவதும் உணர்ந்தே செயல்படுகிறார்கள். இதுதான் இனியும் RSS பிஜேபி-க்கு தொடர் தலைவலியை கொடுக்கப் போகிறது. அதை எதிர்காலத்தில் இந்த நாடு பார்க்கும். ஏனென்றால் மோடிக்கு 75 வயதாகிறது. இனி இவர் பிரதமர் பதவியில் இருந்து இறங்கியே ஆகவேண்டும். காரணம் 75 வயது அவுட் லைன் என்பது RSS-ன் பைலா தான் 2029 பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி மத்திய ஆட்சி பொறுப்பை உறுதியாக இழந்துவிடும். 2026-ல் நடக்கப்போகும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் 5-வது இடத்தை பிடிப்பது கண்பார்ம். இதை.... தாராளமாக உங்கள் குறிப்பேடுகளில் குறித்துக் கொள்ளுங்கள். நடிகரின் அரசியல் தோல்வி அவமானகரமாகவே இருக்கும். இது உண்மை..!. தமிழ்நாட்டில் முந்தைய கால, பல வருட, அரசியல் களத்தை ஆராய்ந்து வருபவர்களால், இதை சிரித்துக்கொண்டே உறுதியாக சொல்ல முடியும். பிஜேபி எந்த வகையிலும் தமிழக அதிகாரத்திற்கு வரமுடியாது. காரணம்.....,...... வரலாற்றில், பலவித வட இந்திய பேரரசுகளின் ஆட்சியானது... தமிழகத்திற்கு வருவதற்கு முன்பாகவே, அவர்களது ஆட்சி, ஆண்ட இடத்திலேயே அழிந்து போனது. முகலாய சாம்ராஜ்ஜியம் தமிழ்நாட்டிற்கு ஆள்வதற்கு வர முயற்சிக்கும் போது, அது வடக்கே பலம் இழந்து அழிந்தது. பின் விஜயநகர பேரரசும் தமிழ்நாட்டில் கால் ஊன்ற முயற்சித்த போது, தலைக்கோட்டை போரில் தன் சொந்த இடத்திலேயே அழிந்தது. ஆனால் முரண்பாடாக இங்கிலாந்து வெள்ளைக்காரன் தமிழ்நாட்டில் சென்னையில் கடல் மார்க்கமாக வந்து ஆட்சியை கைப்பற்ற இறங்கிய போது, அவனிடம் இருந்த அறிவாயுதமான, புதிய பாணி கல்வி அறிவை தமிழ்உலகம் பெற்றுக்கொண்டது. அதன் பகுத்தறிவு மேலோங்க, தனது வழியை தனியுரிமை ஆக்கிக் கொண்டது. இன்று இந்திய மாநிலங்களில் கல்வி அறிவில் முதிர்ந்த மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாடு இனியும் வெல்லும். ஏமாற்ற போடப்படும், மாய பிம்பங்கள் உடைபடும் உடைக்கப்படும். பிஜேபி ஆதரவு மீடியா, ,டிவி-களின் வெற்று பிரச்சாரம் புஸ்வாணமாகும். தமிழ்நாட்டில் கடைசி ஒரு நடிகரின், அரசியல் கனவும், RSS-மற்றும் பிஜேபியின், தொலைநோக்கு அரசியல் கணக்கும் கலைக்கப்படும். இந்த நிலமை உண்மை நிலை. இதில் மாற்றமே இருக்காது. இது காலத்தின் கட்டாயம் #பதிவு:Rajkumar Narasinghan #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - ShareChat