ShareChat
click to see wallet page
search
#🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # பற்றிய தகவல்கள்... சிவனின் அவதாரங்களில் அர்த்தநாரீஸ்வரர் அவதாரம் தனி சிறப்புடையதாகவும், தனித்தன்மை உடையதாகவும் திகழ்கிறது. அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயரில், அர்த்தம் என்றால் பாதி என்று பொருள்; நாரி என்றால் பெண் என்று பொருள். சிவன் பாதி, பார்வதி பாதி என்று ஆணுருவம், பெண்ணுருவம் இணைந்து இருப்பதால் தான் அர்த்தநாரி + ஈஸ்வரர் (சிவன்) என்பது அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயர் கொண்டது. அர்த்தநாரீஸ்வரர் எனும் பெயர் மட்டுமின்றி வேறு சில பெயர்களும் இருக்கின்றன. 1) உமையொரு பங்கன் 2) மங்கையொரு பாகன் 3) மாதொரு பாகன், என இந்த மூன்று பெயர்களாலும் கூட அர்த்தநாரீஸ்வரர் அழைக்கப்படுகிறார். சிவனின்றி சக்தியில்லை, சக்தியின்றி சிவனில்லை என்பதை விளக்கும் உருவமாக திகழ்கிறது இந்த அர்த்தநாரீஸ்வரர் உருவம். வாழ்வியலில், ஆணின்றி பெண்ணும், பெண்ணின்றி ஆணும் சாத்தியமில்லை இல்லை என்ற பொருளையும் தருகிறது அர்த்தநாரீஸ்வரர் உருவம். காஞ்சி கைலாசநாதர் கோயிலில் இருக்கும் அர்த்தநாரீஸ்வரர் வடிவம் தான் தென்னிந்தியாவிலேயே காணப்படும் பழைய வடிவங்களில் ஒன்று எனக் கூறப்படுகிறது. இங்கு பார்வதி வீணையுடனும், சிவன் காளையில் ஏறி அமர்ந்திருக்கும் கோலத்தில் காணப்படுகிறார்கள். திருச்செங்கோடு சிவன் கோயிலில் மூலவராக அமைந்திருக்கிறார் அர்த்தநாரீஸ்வரர். இங்கு உமாதேவியாருக்கு அர்த்தநாரீஸ்வரி, பாகம்பிரியாள் என்ற பெயர்களும் இருக்கின்றன. இங்கு அர்த்தநாரீஸ்வரர் மாதொருபாகன் என்றும் அழைக்கப்படுகிறார். அர்த்தநாரீஸ்வரர் உருவ தோற்றத்துடன் பிருங்கி முனிவரின் கதையும் தொடர்புடையது என்று கூறப்படுகிறது. பிருங்கி முனிவர் சிவனை மட்டும் வழிப்பட்டு வந்த தீவிரமான சிவன் பக்தர் ஆவார். தொடர்ந்து தவம் செய்து அர்த்தநாரி வடிவம் பெற்ற போதும் கூட பிருங்கி முனிவர் இறைவியையும் சேர்த்து வழிப்பட விரும்பாது, வண்டு வடிவத்திலே இறைவன் பகுதியைத் துளைத்துத் தனிப்படுத்தி வழிப்பட்டு வந்தாராம். பிருங்கி முனிவரின் இந்த செயலைக் கண்டு கோபமடைந்த இறைவி அவரை தன்னிலைப்படுத்தி அவரை வலிவிழந்து போகும்படி சாபமிட்டார். இறைவியின் சாபத்தினால் நடக்க முடியாமல் ஆனார் பிருங்கி முனிவர். வலிவிழந்து போயினும் கூட தன்னிலை மாறாமல் இருந்தார் பிருங்கி முனிவர். இதனைக் கண்டு சிவன், தன் பக்தனில் நிலையை கண்டு வருந்தி மூன்றாவது காலை அருளினார் என்றும் கூறப்படுகிறது. இதனால் தான் பிருங்கி முனிவர் மூன்று கால், மூன்று கையுடன் அமைக்கப்படுவதுண்டு என்றும் சில கூற்றுகள் கூறுகின்றன. #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶
🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 - ShareChat